இலங்கை
கிளிநொச்சியில் இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு
கிளிநொச்சியில் இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிக்கப்பட்டதையடுத்து ,விடுவிப்புக்கான ஆவணத்தை கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலர் எஸ்.முரளிதரனிடம் இன்று 29ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் வைத்து இராணுவத்தினர் கையளித்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
