Connect with us

சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை முக்கியம் அதனால் நடிப்பதை.. ராஷ்மிகா சொன்ன நச் பதில்!

Published

on

Loading

தனிப்பட்ட வாழ்க்கை முக்கியம் அதனால் நடிப்பதை.. ராஷ்மிகா சொன்ன நச் பதில்!

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.சில தினங்களுக்கு முன் தான் இவர்கள் நிச்சயம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.ராஷ்மிகா தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.நச் பதில்! இந்நிலையில், இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் தனது வேலை நேரம் குறித்து ராஷ்மிகா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” நான் அதிகமாகவே வேலை செய்கிறேன். ஆனால், இதை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். 8 மணி நேரத்திற்குமேல் அதிகமாக வேலைபார்ப்பது நமது வாழ்க்கை மற்றும் உடல் நலத்தைக் கெடுத்துவிடும்.இந்த அதிக நேர வேலையைத் தவிர்க்கவில்லை என்றால் பின்னர் நாமே வருந்த வேண்டி வரும்.அலுவலகங்களில் 9–5 என்று வேலை நேரம் உள்ளதுபோல், சினிமாத்துறையில் இருக்க வேண்டும். இருப்பினும் நான் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் ஒதுக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன