இலங்கை
நடுவானில் அட்டூழியம் ; விமானப் பணிப்பெண்ணைத் தாக்கியவருக்கு பிணை
நடுவானில் அட்டூழியம் ; விமானப் பணிப்பெண்ணைத் தாக்கியவருக்கு பிணை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண் ஒருவரை வானில் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சவுதி அரேபிய நாட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் அவரை ரூ. 15,000 ரொக்கப் பிணையிலும் ரூ. 200,000 தனிப்பட்ட உத்தரவாதத்திலும் விடுவிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு நவம்பர் 03 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்தச் சம்பவம் அக்டோபர் 26 ஆம் தேதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்தது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
