சினிமா
பிரெஞ்ச் டீச்சர் அழகா இருந்தாங்க..ஆனா படிக்கல!! சரத்குமார் சொன்ன ரகசியம்…
பிரெஞ்ச் டீச்சர் அழகா இருந்தாங்க..ஆனா படிக்கல!! சரத்குமார் சொன்ன ரகசியம்…
தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர்களில் ஒருவர் சரத்குமார். இவர் தனது திரை வாழ்க்கையில் இதுவரை 150 படத்திற்கும் மேல் நடித்துள்ளார்.சூர்யன், நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக, ஐயா, சமுத்திரம் என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 3BHK திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. மேலும் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகி 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்து வரும் டியூட் படத்தில் முக்கிய ரோலில் சரத்குமார் நடித்திருந்தார்.சமீபத்தில் நடிகை சுஹாஷினி எடுத்த பேட்டியில் கலந்து கொண்ட சரத்குமார், தான் பிரெஞ்ச் மொழி கற்றுக்கொள்ள சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை கூறியிருக்கிறார்.அதில், என் அப்பா எதாவது ஒரு வெளிநாட்டு மொழியை கற்றுக்கொண்டால், அப்போது தான் ஒரு இண்டர்பிரேட்டராக கூட ஆகலாம் என்று சொன்னார். ரஷ்யன் கத்துக்கோ என்றும் அவரே சொன்னார். அதன்படி நான் முதலில் சைனிஸ் கற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன், ஆனால் பிரெஞ்ச் கற்றுக்கொள்ள சென்றுவிட்டேன்.அங்கு பிரெஞ்ச் கற்றுக்கொடுக்க வந்த டீச்சர் ரொம்ப அழகாக இருந்தார். அதனால், கவனம் அவர்மீது திரும்பியது. பிரெஞ்ச் மீது கவனம் பொகவில்லை. அதனால் அங்கிருந்து ரஷ்யன் கிளாஸ் போனேன் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
