இலங்கை
போதைப்பொருள்களுடன் தருமபுரத்தில் மூவர் கைது
போதைப்பொருள்களுடன் தருமபுரத்தில் மூவர் கைது
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புச் சோதனையில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரம் பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து மோப்பநாய் சகிதம் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது 40 லீற்றர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவரும் 5 கிராம் 50 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவரும் 5 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரையும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
