Connect with us

சினிமா

மாதம்பட்டி– ஜாய் கிரிசில்டா வழக்கில் மீண்டும் பரபரப்பு… வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

Published

on

Loading

மாதம்பட்டி– ஜாய் கிரிசில்டா வழக்கில் மீண்டும் பரபரப்பு… வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. திருமணம் செய்வதாக கூறி உறவில் ஈடுபட்டு, பின்னர் விலகியதாக ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் அடிப்படையில், மாநில மகளிர் ஆணையம் இருவரையும் மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளது. மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரின் முன்னிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா ஆகியோர் சென்னையில் ஆணைய அலுவலகத்தில் இரண்டாவது முறையாக இன்று (அக்டோபர் 28) ஆஜராகியுள்ளனர்.முதல் கட்ட விசாரணையில் சில முக்கியமான கேள்விகள் பதிலளிக்கப்படாததால், ஆணையம் இருவருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டது எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆடை வடிவமைப்பாளராக அறியப்படும் ஜாய் கிரிசில்டா, சமீபத்தில் மாநில மகளிர் ஆணையத்தில் அளித்த புகாரில், “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்வதாக கூறினார். ஆனால் பின்னர் என்னை ஏமாற்றிவிட்டார்.”என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதனடிப்படையிலேயே இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன