இலங்கை
மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு!
மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு!
வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் தோட்டக்காணி ஒன்றுக்குப் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
நேற்றுக் காலை தோட்டத்துக்குச் சென்ற விவசாயி யானை ஒன்று இறந்துகிடந்ததை அவதானித்ததை அடுத்து கனகராயன்குளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.
அதையடுத்து சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறியப்படுத்தப்பட்டதையடுத்து திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
