Connect with us

இலங்கை

வடக்கு அதிபர் சேவையில் உள்ளீர்க்கப்பட்டவரின் பெயர் ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில்!

Published

on

Loading

வடக்கு அதிபர் சேவையில் உள்ளீர்க்கப்பட்டவரின் பெயர் ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில்!

வட மாகாணம் கிளிநொச்சி வலயம் ஒன்றில் உள்ள பாடசாலை ஒன்றின்  அதிபராக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஒருவருக்கு ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவது,

Advertisement

ஏற்கனவே அதிபர் பட்டியலில் உள்ளீர்க்கப்பட்ட ஒருவரை 2026 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வகையில் வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றப்பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த  இடமாற்றத்திற்கு பெயர் பரிந்துரைக்கப்பட்ட அதிபர்  2 வருடங்களுக்கு முன்பு அதிபராக கிளிநொச்சி வலயத்திற்கு சென்றுள்ள நிலையில் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

அண்மையில் ஆசிரிய இடமாற்றத்தில் முறைகேடுகள் இருப்பதாக வடமாக ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன