Connect with us

விளையாட்டு

ENG-W vs SA-W 1st Semi-Final: சதம் விளாசிய தென்னாப்பிரிக்க கேப்டன்; இங்கிலாந்துக்கு 320 ரன்கள் இலக்கு!

Published

on

England vs South Africa ICC

Loading

ENG-W vs SA-W 1st Semi-Final: சதம் விளாசிய தென்னாப்பிரிக்க கேப்டன்; இங்கிலாந்துக்கு 320 ரன்கள் இலக்கு!

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.இந்நிலையில், கௌஹாத்தியில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தேர்ந்தெடுத்ததை அடுத்து, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிக்காக லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் 100 ரன்களுக்கும் அதிகமான துவக்க கூட்டணியை அமைத்து வலுவான அடித்தளத்தை அமைத்திருந்தனர். முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் லாரா வோல்வர்ட் சதம் விளாசி அசத்தினார். அவர் 143 பந்துகளில் 169 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 20 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். 169 ரன்கள் எடுத்ததன் மூலம், உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்காக அதிகபட்ச ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை லாரா வோல்வர்ட் படைத்தார்.அவரைத் தொடர்ந்து, தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்களும், மாரிஸன் காப் 42 ரன்களும் எடுத்தனர். சோல் டிரையான் 33 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்கல்ஸ்டோன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லாரன் பெல் 2 விக்கெட்டுகளையும், கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.இங்கிலாந்து (England) கேப்டன்: நாட் ஸ்கைவர்-பிரண்ட்வீரர்கள்: எம் அர்லாட், டாமி பியூமண்ட், லாரன் பெல், ஆலிஸ் கேப்சி, சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், சாரா கிளென், எமி ஜோன்ஸ், ஹீதர் நைட், எம்மா லாம்ப், லின்சி ஸ்மித், டானி வியாட்-ஹோட்ஜ்.தென் ஆப்பிரிக்கா (South Africa)கேப்டன்: லாரா வோல்வார்ட்வீரர்கள்: அயபோங்கா காகா, சோலே ட்ரையன், நதீன் டி கிளார்க், மரிஸேன் கேப், டாஸ்மின் பிரிட்ஸ், சினாலோ ஜஃப்டா, நோன்குலெலுக்கோ மலாபா, அன்னெரி டெர்க்சென், அன்னீக் போஷ், மசாபதா கிளாஸ், சுனே லூஸ், கராபோ மேசோ, துமி சேகுகுனே, நோண்டுமிசோ ஷங்கசே. ரிசர்வ்: மியானி ஸ்மித்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன