Connect with us

இலங்கை

ஆசியாவில் அதிக வயதானவர்கள் வாழும் நாடுகளில் இடம்பிடித்த இலங்கை!

Published

on

Loading

ஆசியாவில் அதிக வயதானவர்கள் வாழும் நாடுகளில் இடம்பிடித்த இலங்கை!

  ஆசியப் பிராந்தியத்தில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பின் வேகம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் நிஷாணி உபயசேகர  2012 ஆம் ஆண்டில் நாட்டில் வயதான மக்கள் தொகை 12% ஆக இருந்தது என்றும், அது 2024 ஆம் ஆண்டில் 18% ஆக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில், 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12% ஆக இருந்தனர். 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், வயதான சமூகம் 18% ஆக உயர்ந்துள்ளது.

2040 ஆம் ஆண்டளவில் இந்த மக்கள் தொகையில் 25% பேர், அதாவது நான்கு பேரில் ஒருவர் வயதானவராக இருப்பார்கள் என்று நாங்கள் முன்னறிவித்துள்ளோம்.

Advertisement

ஆசியாவில் உள்ள ஒத்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் அதிகமாக உள்ள நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்குக் பிறக்கும்போதே ஆயுட்கால எதிர்ப்பார்ப்பு அதிகரித்ததும், புதிய பிறப்புகளின் எண்ணிக்கை குறைவதுமே முக்கிய காரணங்களாகும்.”

வயதான சமூகத்தினரிடையே காணப்படும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் தடுக்கி விழுதல் தற்போது ஒரு நோயியல் நிலைமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முதியோர் நோய் நிபுணர் வைத்தியர் சிதிர செனவிரத்ன குறிப்பிட்டார்.

Advertisement

“65 வயதுக்கு மேற்பட்டவர்களில், மூன்று பேரில் ஒருவர் ஒரு வருட காலத்திற்குள் தடுக்கி விழுவதாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிப் பேர் ஒரு வருட காலத்திற்குள் தடுக்கி விழுவதாகவும் புள்ளிவிவரங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பல சமயங்களில், விழுவது ஒரு நோயாக அடையாளம் காணப்படவில்லை. ஆனால், இப்போது விழுவதையும் ஒரு நோய் என்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

பெரும்பாலும் விழுந்த பிறகு காயம் ஏற்பட்டால், காயத்திற்கு சிகிச்சை அளிக்கிறோம்; ஆனால் விழுவதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்பதில்லை. வயதாகும்போது விழுந்தால், இது வயதின் காரணமாக நடக்கிறது என்று நினைக்கிறோம்.

Advertisement

ஆனால், அது சாதாரணமானது அல்ல. விழுவது என்பது ஒரு நோய்தான். விழுவதால் விபத்துகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். விழுவதால் மரணங்கள் கூட நிகழும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

பலவீனம் என்பது விழுவதற்கான ஒரு முக்கிய காரணியாகும். இதைப் பரிசோதித்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன