இந்தியா
தமிழ்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!
தமிழ்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு சென்றிருந்த 3 பேர் மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகில் குறித்த 3 பேரும் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை மண்ணடியில் தங்கி இருந்த இசைவேந்தன், யோகராசா, சுஜீவனை ஆகிய மூன்று இலங்கையர்களும் நேற்று தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று பேரிடமும் இந்தியாவில் வந்து தங்குவதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் மூன்று பேர் மீதும் இலங்கையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை செல்லும் விமானத்தில் மூன்று பேரும் நாடுகடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன
