இந்தியா
படகு கவிழ்ந்து விபத்து : ஒருவர் சாவு!
படகு கவிழ்ந்து விபத்து : ஒருவர் சாவு!
இந்தியாவின், உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச்சில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை விபத்தில் சுமார் 8 பேர் வரை காணாமல்போயுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் – பரதபூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கௌடியல ஆற்றில், புதன்கிழமை(29) குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது.
இந்தவிபத்தில் 60 வயதுடைய பெண் ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
லக்கிம்பூர் மாவட்டத்தின் கைரதியா கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் பரதபூருக்கு படகில் சென்றுக்கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அந்தநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீரோட்டம் அதிகமாக இருந்ததால் படகு ஆற்றில் கவிழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் காணாமல் போனவர்களை தேடும்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
