இலங்கை
யாழில் தெருவில் குப்பை கொட்டிய பெண்ணை மீண்டும் அள்ள வைத்த நபர்; கலகலப்பு சம்பவம்!
யாழில் தெருவில் குப்பை கொட்டிய பெண்ணை மீண்டும் அள்ள வைத்த நபர்; கலகலப்பு சம்பவம்!
யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் தெருவில் குப்பை கொட்டிய பெண்ணை மீண்டும் அள்ள வைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து வீதியில் குப்பையை வீசி சென்றுள்ளார்.
இதனை அவதானித்த நபர் ஒருவர் பெண்ணை மறித்து , அவரது தவறை சுட்டிக்காட்டினார்.
எனினும் குப்பை கொட்டிய பெண் காணொளி எடுத்தவருடன் தகராறில் ஈடுபாட்டார். இதனையடுத்து காணொளியஒஇ வெளியிடுவேன என கூறிய்தை அடுத்து பெண் தான் கொட்டிய குப்பையை மீண்டும் எடுத்துச் சென்றுள்ளார்.
அதேவேளை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் கழிவுகளை வீசி சென்றவர்களிடம் இருந்து கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு லட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
