இலங்கை
யாழ்.நகர்ப் பகுதியில் போதைப்பொருள்களுடன் நடமாடிய நால்வர் கைது!
யாழ்.நகர்ப் பகுதியில் போதைப்பொருள்களுடன் நடமாடிய நால்வர் கைது!
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் போதைப்பொருள்களுடன் நடமாடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்புக் பொலிஸாரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து போதைமாத்திரைகள் மற்றும் ஹெரோய்ன் என்பன மீட்கப்பட்டுள்ளன. அவர்களை நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தும் நகர்வுகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
