பொழுதுபோக்கு
கம்-பேக் கொடுக்கும் காமெடி நடிகர்… முக்கிய ரோலில் பாலகிருஷ்ணாவுக்குப் பதில் இவர்; ‘ஜெயிலர் 2’ சர்ப்ரைஸ் அப்டேட்!
கம்-பேக் கொடுக்கும் காமெடி நடிகர்… முக்கிய ரோலில் பாலகிருஷ்ணாவுக்குப் பதில் இவர்; ‘ஜெயிலர் 2’ சர்ப்ரைஸ் அப்டேட்!
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குநர் என்ற இடத்தை பிடித்தவர் நெல்சன். இவர் ஆக்ஷன் மற்றும் டார்க் காமெடி படங்கள் இயக்குவதில் சிறந்து விளங்குகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் நெல்சன் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார்.தொடந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். கடந்த 2023-ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், விநாயக், வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் – யோகிபாபு காமெடி செமயாக ஒர்க் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து, ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘ஜெயிலர் 2’ திரைப்படம் 2026-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக பாலகிருஷ்ணா இந்த படத்தில் நடிக்கவில்லையாம். அதற்கு பதிலாக நடிகர் பகத் ஃபாசில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் பகத் ஃபாசில், ரஜினிகாந்த் உடன் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.இன்னொரு சர்ப்ரைஸ் நியூஸ் என்னவென்றால் நடிகர் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் சந்தானம் நகைச்சுவை நடிகராக மீண்டும் கம்பேக் கொடுப்பார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் மீண்டும் இந்த படத்தில் நகைச்சுவை நடிகராக என்ட்ரி கொடுப்பது ரசிகர்களை உற்சாக்கத்தில் ஆழ்த்தும்.முன்னதாக நடிகர் சந்தானம் ‘எந்திரன்’ படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். கடைசியாக ‘லிங்கா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு ‘ஜெயிலர் 2’ படத்தின் மூலம் ரஜினி – சந்தானம் காம்போ அரங்கேற உள்ளது. சந்தானம் காமெடி நடிகராக வந்தால் யோகிபாபுவின் கதாபாத்திரம் என்னவாகும் என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.
