Connect with us

இலங்கை

சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற கிளிநொச்சி இளைஞர் பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்பு!

Published

on

Loading

சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற கிளிநொச்சி இளைஞர் பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடை சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம்  சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில் பெலாரஸ் எல்லையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.  பெலாரஸின் மாநில எல்லைக் குழுவின் தகவலின்படி, கடந்த  28 ஆம் திகதி இரவு பெலாரஷ்ய எல்லைக் காவலர்கள் லாட்விய எல்லைக்கு அருகில் இரண்டு வெளிநாட்டினரைக் கண்டுபிடித்துள்ளனர். 

அவர்களில் ஒருவரின் உடல் உயிரற்று காணப்பட்டுள்ளது. பின்னர் விசாரணையில், இருவரும் இலங்கை குடிமக்கள் என அடையாளம் காணப்பட்டனர். லாட்விய பாதுகாப்புப் படையினர் அவர்களை தாக்கி, அவர்கள் உடலால் சோர்வடைந்திருந்தபோதிலும், அவர்களை ஆற்றை கடந்து பெலாரஸ் எல்லைக்குள் வீசியதாக பெலாரஸ் எல்லைக் குழு, தகவல்களை வெளியிட்டுள்ளது. பெலாரஷ்ய காவலர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே அகதிகளில் ஒருவர் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

விலங்குகள் செல்லும் கதவுக்கருகே ஒரு அகதியின் உடைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், புலனாய்வு பணிக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன