Connect with us

பொழுதுபோக்கு

சிவக்குமார் பாட்டு, சிவாஜி குரலில் பாடிய டி.எம்.எஸ்; கடைசில எல்லாமே மாறிப்போச்சு: பாடல் ஹிட்டாச்சா?

Published

on

dms

Loading

சிவக்குமார் பாட்டு, சிவாஜி குரலில் பாடிய டி.எம்.எஸ்; கடைசில எல்லாமே மாறிப்போச்சு: பாடல் ஹிட்டாச்சா?

1968-ம் ஆண்டு ஏவிம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் உயர்ந்த மனிதன். சிவாஜி, வாணிஸ்ரீ, சிவக்குமார், பாரதி, சௌகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தின் அத்தனை பாடல்கையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பாடல்கள் பெரிய ஹிட் அடித்தது.வாணிஸ்ரீயை காதலித்த பெரும் பணக்காரரான சிவாஜி கணேசன் சந்தர்ப்ப சூழ்நிலையால், சௌகார் ஜானகியை திருமணம் செய்துகொள்வார். இதனால் வாணிஸ்ரீயை ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் இருக்கும், சிவாஜியிடம் வேலைக்கு வருபவர் தான் சிவக்குமார். வாணிஸ்ரீயின் மகனாக இவர், சிவாஜியின் மகனும் கூட. ஆனால் சிவக்குமார் தனது மகன் என்று தெரியவில்லை என்றாலும், மகன் போல் அதிக பாசம் காட்டுவார் சிவாஜி.படத்தில் படிப்பறிவு இல்லாத சிவக்குமார், நடிகை பாரதியை காதலிப்பார். அவரும் இவரை காதலிப்பார். அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த சிவக்குமாரை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏ.வி.எம் நிறுவனம் சிவக்குமார் – பாரதி ஜோடிக்கு ஒரு பாடல் வைத்திருப்பார்கள். சிவக்குமார் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஏ.வி.எம்.நிறுவனம் இந்த பாடலை வெளியிப்புற படப்பிடிப்பு நடத்தியதாக கூறப்படுகிறது.இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் உணர்ச்சி பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் செதுக்கப்பட்டிருக்கும். நடிகர் சிவக்குமாரின் ஆரம்ப கால படங்களில் மிகவும் முக்கியமான படம் ‘உயர்ந்த மனிதம்’. அப்பா என்றே தெரியாமல் சிவாஜி அவர் ரசித்து பார்த்து நடித்திருப்பது மிகவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ பாடலுக்காக படாகி பி.சுசிலாவிற்கு தேசிய விருது கிடைத்தது.இந்நிலையில், இப்படத்தில் சிவக்குமாருக்காக வைக்கப்பட்டிருந்த பாடலை சிவாஜி குரலில் பாடியது குறித்து பாடகர் டி.எம்.எஸ் மனம் திறந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது,  ”உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் ‘என் கேள்விக்கு என்ன பதில், உன் பார்வைக்கு என்ன பொருள்’ என்று ஒரு பாடல் வரும். இது சாதாரணமாக ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படம் சிவாஜி நடிக்கிறார் என்று நான் பாடல் பாடிவிட்டேன். பாடல் அருமையாக இருக்கிறது என்று எல்லோரும் சொன்னார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனும் ஓகே சொல்லிவிட்டார். நானும் வீட்டிற்கு போய்விட்டேன். அதன்பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு என்னை படக்குழுவினர் அழைத்தார்கள். என்னானது என்று நானும் போனேன். அங்கு போய் பார்த்தம் ஏ.வி.எம் நிறுவனத்தின் மெய்யப்ப செட்டியார் இருந்தார். என்னப்பா சிவக்குமார் படத்திற்கு சிவாஜி மாதிரி பாடிவச்சிருக்க. சிவக்குமார் படம் மாதிரி பாடுப்பா. யாரும் இதை உன்னிடம் சொல்லவில்லையா என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அதன்பின்னர் சிவக்குமாருக்கு ஒரு குரலில் பாடினேன்” என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன