Connect with us

இலங்கை

இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு புதிய உத்வேகம்; மீண்டும் சேவைகளை ஆரம்பித்த போலந்து Enter Air

Published

on

Loading

இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு புதிய உத்வேகம்; மீண்டும் சேவைகளை ஆரம்பித்த போலந்து Enter Air

  போலந்து நாட்டின் பட்டய விமான சேவை நிறுவனமான ‘எண்டர் ஏர்’ (Enter Air), இன்றுடன் இலங்கைக்குத் தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

போலந்தின் கடோவிஸ் மற்றும் வார்சா நகரங்களில் இருந்து இரண்டு விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

Advertisement

விமானத்தில் வந்திறங்கிய பயணிகளுக்கு, இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய இலங்கை விருந்தோம்பலுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) தகவல்படி, போலந்தின் கடோவிஸ் (Katowice) மற்றும் வார்சா (Warsaw) ஆகிய நகரங்களிலிருந்து வந்த இரண்டு ‘எண்டர் ஏர்’ விமானங்களும் குளிர்காலத்துக்கான (Winter Season) சேவைப் பயணத்தின் முதல் விமானங்களாக நேற்று காலை வரவேற்கப்பட்டன.

இந்த வரவேற்பை சிறப்பிக்கும் வகையில், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் (AASL) ஏற்பாடு செய்திருந்த நீர்த் தாரை பீரங்கி மரியாதை (Water Cannon Salute) அளிக்கப்பட்டது.

Advertisement

அத்துடன், இலங்கைத் தேயிலைச் சபையின் (Sri Lanka Tea Board) அனுசரணையுடன், பயணிகளுக்கு உயர்தரமான சிலோன் தேயிலைப் பொதிகள் (Premium Ceylon Tea packs) பரிசுகளாக வழங்கப்பட்டன.

போலந்தில் இருந்து விமானங்கள் மீளவும் வந்திருப்பது, ஐரோப்பிய சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

போலந்து Enter Air சேவை மீள ஆரம்பித்ததுடன், இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன