இலங்கை
எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய குறித்த எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இன்று நள்ளிரவு முதல் அமுலிற்கு வரும் வகையில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்படலாம்.
இதேவேளை, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த மாதத்தில் சுமார் மூன்று சதவீதம் குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
