சினிமா
கல்யாணம் ஆகி குழந்தை இருந்தால் அப்படி தான் சொல்வார்கள்!! நடிகை சம்யுக்தா ஷான்..
கல்யாணம் ஆகி குழந்தை இருந்தால் அப்படி தான் சொல்வார்கள்!! நடிகை சம்யுக்தா ஷான்..
தமிழ் சினிமாவில் சிறுசிறு ரோலில் நடித்து அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் நடிகை சம்யுக்தா ஷான். திருமணமாகி விவாகரத்து பெற்று தன் குழந்தையுடன் இருக்கும் சம்யுக்தா, தொகுப்பாளினி பாவனாவுடன் தற்போது வசித்து வருகிறார்.சமீபத்தில் நடந்த மதராஸ் மாஃபியா கம்பெனி என்ற படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அப்போது சினிமாவில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகப்பெரிய சவால், நிறம் பார்ப்பார்கள், கல்யாணம் ஆகிவிட்டதா என்று பார்பார்கள்.கல்யாணமாகி குழந்தை இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் வேலைக்கு ஆகாது என்பார்கள், ஆனால் இந்த படத்தில் எனக்கு போலிஸ் ரோல் கிடைத்துள்ளது என்று சம்யுக்தா தெரிவித்துள்ளார்.
