இலங்கை
கேகாலையில் கத்தியால் குத்தப்பட்டு இளைஞன் கொலை!
கேகாலையில் கத்தியால் குத்தப்பட்டு இளைஞன் கொலை!
கேகாலை – புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் கத்தியால் குத்தப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக புலத்கொஹுபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கேகாலை எந்துராபொல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, கொலை செய்யப்பட்ட இளைஞன் தனது வீட்டினுள் உள்ள ஒலிப்பேழையை அதிக சத்தத்துடன் இயக்கியுள்ளார். இதன்போது அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவர், ஒலிப்பேழையின் சத்தத்தை குறைக்குமாறு இளைஞனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் எல்லை மீறியதால் அயல் வீட்டில் வசிக்கும் நபர், இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் 76 வயதுடைய அயல் வீட்டில் வசிக்கும் நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்கொஹுபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
