சினிமா
நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷுக்கு திருமணம்.. நிச்சயதார்த்தம் முடிந்தது! பெண் யார் தெரியுமா?
நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷுக்கு திருமணம்.. நிச்சயதார்த்தம் முடிந்தது! பெண் யார் தெரியுமா?
நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியும் பிரபலமான நடிகருமானவர் அல்லு சிரிஷ். இவர் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்த நிலையில், அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடித்துள்ளது. நயனிகா என்கிற பெண்ணுடன்தான் அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.கடந்த பல வருடங்களாக அவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகிறது. நயனிகா ரெட்டி ஒரு பிரபலமான தொழிலதிபரின் மகள் என தகவல் தெரிவிக்கின்றனர்.இவர்களுடைய நிச்சயதார்த்தத்தில் அல்லு அர்ஜுன் குடும்பம், ராம் சரண் உள்ளிட்ட பல முன்னணி தெலுங்கு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
