Connect with us

பொழுதுபோக்கு

பெரிய வசனம், சரியாக பேசியும் கெட்ட வார்த்தையில் திட்டிய இயக்குனர்; பார்த்திபனுக்கு இறுதியில் வந்த பாராட்டு!

Published

on

parthiban

Loading

பெரிய வசனம், சரியாக பேசியும் கெட்ட வார்த்தையில் திட்டிய இயக்குனர்; பார்த்திபனுக்கு இறுதியில் வந்த பாராட்டு!

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தமிழ் சினிமாவில் எப்போதும் தனி பாதையை தேர்ந்தெடுத்தவராக விளங்குகிறார். பாரம்பரியமாக நடைபெறும் வழிமுறைகளைப் பின்பற்றாமல், தன் படைப்புகளில் எப்போதும் ஒரு வித்தியாசத்தைத் தேடி, அதனை நுட்பமான முறையில் கதைகளிலும் காட்சிப்படுத்தும் வகையிலும் வலுவாக கொண்டு வருகிறார். எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாகச் சொல்லாமல், தனக்கே உரிய நடையில் ஒரு அழகும், ஆழமும் சேர்த்து, அந்தக் கதையைப் பரிமாறும் திறமையால் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார்.பார்த்திபனின் படங்கள் பெரும்பாலும் அவருடைய சிந்தனை விஷமைகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். ‘பார்த்தாலே பரவசம்’, ’ஒத்த செருப்பு’ போன்ற படங்கள் அவரது புதுமை படைத்த இயக்கத்தில் முக்கிய எடுத்துக்காட்டுகள். குறிப்பாக, ஒரு பாத்திரம் மட்டுமே கொண்டிருந்த ’ஒத்த செருப்பு’ போன்ற படங்களால் அவர் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கினார். இப்படித்தான், பாரம்பரியத்திலிருந்து விலகி, சினிமாவுக்கு புதிய உருவங்களைத் தந்த பார்த்திபனின் பயணம், இப்போது ’இரவின் நிழல்’ வரை வந்துள்ளது. இந்தப் படம், உலகிலேயே ஒரே ஷாட்டில், ஒரு எடிட்டிங் இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படமாகப் பெரும் கவனத்தை ஈர்த்தது. சினிமாவை வெறும் பொழுதுபோக்காக அல்லாது, ஒரு கலை வடிவமாகக் கொண்டாடும் பார்த்திபன், அவரது தொழில்முறை நம்பிக்கைகளிலும், கலை அனுபவங்களிலும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறார். அவரின் இந்த பயணம், தமிழ் சினிமாவுக்கே ஒரு வித்தியாசமான அடையாளமாகும்.இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ‘பார்வையின் மறுபக்கம்’ திரைப்படத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ”பார்வையின் மறுபக்கம் படத்தில் ஒரு டயலாக் கொடுத்தார்கள். அந்த டயலாக் பெரிய டயலாக். நான் நல்ல மனப்பாடம் செய்து பேசிவிட்டேன். அங்கு இருந்து இயக்குநர் பால கிருஷ்ணன் சார் வந்து கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டினார். சான்ஸ் கேட்டு அலையுறீங்க வாய்ப்பு கொடுத்தா இப்படியாடா பண்ணுவ நீ. ஏன் அந்த டயலாக்கை மிஸ் பண்ணுன என்று கேட்டார். டக்குனு கேட்டதும் எனக்கும் எதுவும் தெரியல. அப்போது நடிகை ஸ்ரீபிரியா இல்ல சார் அவர் கரெக்டா பேசுனு மாதிரி தான் இருக்கு என்று சொன்னாங்க. பால கிருஷ்ணன் சார் இல்லம்மா. அப்படினு ஒரே பிரச்சனையாக இருந்தது. அப்பறம் அந்த ரெக்கார்டு எடுத்து கேட்டு பார்த்ததில் கரெட்டாக இருந்தது. அப்போது நான் ரொம்ப இறுகி போய் இருக்கும் பொழுது எல்லோரும் கைத்தட்டினார்கள். நான் டயலாக்கை கரெக்டாக சொல்லிவிட்டேன் என்று. அப்பறம் பாலகிருஷ்ணன் சார் அடுத்த டயலாக்கை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்” என்றார்.1982-ஆம் ஆண்டு கே.எம்.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பார்வை மறுபக்கம்’. இந்த படத்தில் விஜயகாந்த், ஸ்ரீப்பிரியா, பார்த்திபன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இது நடிகர் பார்த்திபனின் ஆரம்ப காலக்கட்ட படமாகும். இந்த படத்தில் பார்த்திபன் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன