Connect with us

பொழுதுபோக்கு

வி.ஜே பார்வதி- கம்ருதீன் வேணும்னே அடல்ட்ஸ் கன்டென்ட் பேசுறாங்க: உண்மையை உடைத்த ஆதிரை

Published

on

aadhirai

Loading

வி.ஜே பார்வதி- கம்ருதீன் வேணும்னே அடல்ட்ஸ் கன்டென்ட் பேசுறாங்க: உண்மையை உடைத்த ஆதிரை

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் மிக பிரமாண்டமாக தொடங்கியது. திரைப்பிரபலங்கள் இல்லாமல்  சமூக வலைதள பிரபலங்கள் 20 பேர் போட்டியாளராக கலந்து கொண்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகள் இருக்கும் ஆனாலும் சில பார்த்து மகிழும் நிகழ்வுகளும் இருக்கும். ஆனால், சீசன் 9 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து சண்டைகள் மட்டுமே இருக்கிறது. எதற்கெடுத்தாலும் பிரச்சனை என்ன செய்தாலும் கூச்சல் என்ற நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.எந்த சீசன்களிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டு சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் ‘ஏ’ கன்டென்ட்  அதிகமாக பேசப்படுவதாக நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் ரோஸ்ட் செய்து வருகின்றனர். மேலும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என எல்லை மீறி பிக்பா நிகழ்ச்சி போய்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆதிரை, வி.ஜே.பார்வதியும் கம்ருதீனும் வேண்டும் என்றே அடல்ட்ஸ் கன்டென்ட் பேசுவதாக குற்றம்சாட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “பார்வதி – கம்ருதீன் இருவரும் வேண்டும் என்றே கன்டன்டிற்காகவே பேசிக் கொண்டிருந்தார். கம்ருதீன், அரோராவை வைத்து லவ் கன்டென்ட் கொடுக்க நினைத்தார். அது நடுவில் முறிந்துவிட்டது. அதன்பிறகு கம்ருதீன், பாருவிடம் வந்தார். பார்வதி – கம்ருதீன் வீட்டிற்கு உள்ளே என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது. நான் எஃப்.ஜே கூட இருந்தேன் என்றால் எனக்கு தவறான எண்ணம் எதுவும் இல்லை. எஃப்.ஜே பிக்பாஸ் வீட்டில் எனக்கு சப்போர்ட் சிஸ்டமாக இருந்தார். அதைபற்றி தப்பாக பேசுகிறார்கள் என்றால் நான் அதற்கு வருத்தப்படவே மாட்டேன். கம்ருதீன், பார்வதியின் கையில் எழுதிகாட்டியது எல்லாம் தேவையில்லாத விஷயம். பார்வதியும் இந்த இடத்தில் டபுள் கேம் விளையாடுறாங்க” என்றார்.பிக்பாஸ் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு கம்ருதீன், பார்வதியை பிடித்திருக்கிறது என்று சொல்லி சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது பார்வதியிடம் கம்ருதீன் கையில் எதோ எழுதியும் காண்பித்தார்.இதை பார்த்த நெட்டிசன்கள் இத்தனை கேமரா இருக்கும் பொழுதே கம்ருதீன் இப்படி செய்கிறாரே. ஏன் இப்படி எல்லாம் செய்கிறார். இதையெல்லாம் பிக்பாஸ் கேட்க மாட்டாரா? என்று கமெண்ட் செய்து வந்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன