பொழுதுபோக்கு
OTT: நொடிக்கு நொடி பரபரப்பு… சீட் நுனியில் அமர வைக்கும் கிரைம் த்ரில்லர் படங்கள்; இந்த வாரம் மிஸ் பண்ணாதீங்க!
OTT: நொடிக்கு நொடி பரபரப்பு… சீட் நுனியில் அமர வைக்கும் கிரைம் த்ரில்லர் படங்கள்; இந்த வாரம் மிஸ் பண்ணாதீங்க!
ஒவ்வொரு வாரமும் வீக் எண்டில் சினிமா ரசிகர்கள் ஓ.டி.டி-யில் படம் பார்த்து மகிழ்வார்கள். அப்படி இந்த வாரம் க்ரைம், திரில்லர் படம் பார்க்க ஆர்வமாக இருக்கீங்களா. அப்படினா இந்த தொகுப்பை முழுமையாக படிச்சிட்டு இந்த வீக் எண்டை என்ஜாய் பண்ணுங்க.தலைவன்இயக்குநர் ஜிஸ் ஜாய் இயக்கத்தில் கடந்த ஆண்டு அதிரடி திரைப்படமாக வெளியான படம் தான் ‘தலைவன்’. மிஸ்ட்ரி, த்ரில்லர் நிறைந்த இந்த படத்தில் பிஜு மேனன் மற்றும் ஆசிப் அலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போலீஸ் விசாரணையும் அதனை சுற்றி நடக்கும் த்ரில் திரைப்படமாக உருவாகியுள்ள ‘தலைவன்’ படத்தை சோனி லைவ் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.தடம்அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் ‘தடம்’. இளைஞரின் கொலை வழக்கில் சிக்கிக்கொள்ளும் இரட்டை அருண் விஜய் கதாபாத்திரம். யார் கொலை செய்தது? ஏன்? என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.கருடன்2023-ஆம் ஆண்டு வெளிவந்த க்ரைம், திரில்லர் மலையாள திரைப்படம் ‘கருடன்’. சஸ்பென்ஸ், ட்விஸ்ட், த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.ஒரு நொடிஎம்.எஸ். பாஸ்கர், கஜராஜ் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் ‘ஒரு நொடி’. க்ரைம் காட்சிகள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் கண்டு களியுங்கள்.தெகிடிநடிகர் அசோக் செல்வன் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் ‘தெகிடி’. திருப்பங்கள் நிறைந்த இந்த திரில்லர் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.ரேகாசித்ரம்ஆசிப் அலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் ’ரேகாசிதம்’ (Rekhachithram). இந்த திரைப்படத்தை சோனி லைவ் ஓ.டி.டி-யில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.ஜோசப்கடந்த 2018-ல் மலையாளத்தில் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் ‘ஜோசப்’. இந்த திரில்லர் படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.
