பொழுதுபோக்கு
கொஞ்சம் கிளாஸ் எடுக்கணும்… தரதரன்னு கிழிக்க போறேன்; ஃபயராக மாறிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்
கொஞ்சம் கிளாஸ் எடுக்கணும்… தரதரன்னு கிழிக்க போறேன்; ஃபயராக மாறிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி 20 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் திரைப்பிரபலங்களுக்கு பதிலாக சமூக வலைதள பிரபலங்கள் அதிகம் கலந்து கொண்டதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் பிரச்சனையை தாரக மந்திரமாக கடைப்பிடித்து வருகின்றனர்.எதற்கெடுத்தாலும் சண்டை, என்ன செய்தாலும் சண்டை என்ற லெவலில் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இது பிக்பாஸ் நிகழ்ச்சியா? இல்லை சவுண்ட் பாக்ஸ் நிகழ்ச்சியா? என்ற ரேஞ்சிற்கு மக்கள் கடுப்பில் உள்ளனர். இந்த வீட்டில் எப்போதும் சண்டை மட்டும் தான் இருக்குமா? சந்தோசமான நிகழ்வுகள் நடக்கவே நடக்காதா? என்றும் கேள்வி எழுப்பி வந்தனர்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகம் கண்டெண்ட் கொடுப்பதே வி.ஜே.பார்வதி தான் இவர்கள் இல்லாமல் இந்த 20 நாட்களில் எந்த ப்ரொமோவும் வருவதில்லை. எப்ப பார்த்தாலும் சண்டை என்று அதிருப்தி அடைந்த மக்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக போட்டியாளர்கள் 90’ஸ் கிட்ஸ் விளையாட்டுகள் எல்லாம் விளையாடினர். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று பதிவிட்டு வந்தனர்.பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே., ஆதிரை ஆகியோர் வெளியேறினர். பிக்பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்கும் விதமாக தற்போது வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே இறங்க உள்ளனர். முன்பு 50 நாட்களுக்கு மேல் தான் வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள். ஆனால், தற்போது 30 நாட்கள் முடிவடையாத நிலையில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்ல உள்ளனர்.#Day28#Promo1 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/affYZVC0tSஇந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 28-ஆம் நாளின் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில், மேடைக்கு வந்த வைல்டு கார் போட்டியாளரான சாண்ட்ரா, குரூப் இருக்கு உள்ள அத உடைத்தால் அவர்களுடைய ஸ்டார்டஜி என்னவென்று எங்களுக்கு தெரியும் என்றார். உள்ளே கால் எடுத்து வைத்ததும் எல்லோரையும் தரதரவென்று கிளிக்கபோறொம் என்று பிரிஜின் கூறினார். உள்ளே இருக்கும் போட்டியாளருக்கு கிளாஸ் எடுக்க வேண்டும் என்ரு திவ்யா கூறினார். நான் வாய்சவுடால் விடமாட்டேன் செஞ்சி காட்டுவேன் என்று அமித் கூறுகிறார்.இத்துடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது. இந்த ப்ரொமோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
