Connect with us

சினிமா

பிரபல இயக்குநர் வி.சேகரின் உடல்நிலை கவலைக்கிடம்.! மகன் வெளியிட்ட கண்ணீர் பதிவு

Published

on

Loading

பிரபல இயக்குநர் வி.சேகரின் உடல்நிலை கவலைக்கிடம்.! மகன் வெளியிட்ட கண்ணீர் பதிவு

தமிழ் சினிமாவில் வெளியான விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா, பொண்டாட்டி சொன்னா கேட்கணும் போன்ற படங்களை இயக்கியவர் வி.சேகர். இவரது பல படங்கள் எவர்கிரீன் படங்களாக காணப்படுகின்றன.நகைச்சுவை நடிகர்களான வடிவேலு மற்றும் விவேக்கை இணைத்து வைத்து அவர்களுக்கு என்று ஒரு பாடலை இயக்கி, அதை ஹிட் ஆக்கியவரும் இவர்தான்.  தற்போது இவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில்,  வி. சேகரின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்து உள்ளதாக அவருடைய மகன் பதிவிட்டுள்ளார்.  அதாவது நான்கு நாட்களுக்கு முன்  இருதய கோளாறால் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வி. சேகர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருடைய உடல்நிலை மோசமாகி கொண்டே செல்வதாக அவருடைய மகன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அவருடைய பதிவில், தமிழ் மக்களே.! என் தந்தையும் மக்கள் இயக்குநருமான வி.சேகர் தற்போது தன் உயிருக்காக போராடிக் கொண்டுள்ளார். அவர் விரைவில் உடல்நலம் பெற அன்பின் ஒளியாக ஒரு தீபம் ஏற்றி இறைவனை மனமார வேண்டிக் கொள்ளுங்கள்… என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவுக்கு பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன