இலங்கை
அதிகரிக்கப்படும் பாடசாலை நேரம் ; பிரதமர் வெளியிட்ட தகவல்
அதிகரிக்கப்படும் பாடசாலை நேரம் ; பிரதமர் வெளியிட்ட தகவல்
பாடசாலை நேரத்தை மேலும் அரை மணி நேரம் நீடிக்கும் முடிவை தொழிற்சங்கங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
மாற்றங்களைச் செய்யும் போது வெவ்வேறு கருத்துகள் வெளிப்படுவது சாதாரணமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எந்தவொரு ஆய்வையும் நடத்தாமல் பாடசாலை நேரத்தை நீடிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அதிபர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த முடிவுக்கான காரணங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவ தெரிவித்துள்ளார்.
