பொழுதுபோக்கு
காதல் ஹீரோவுக்கு மகன், விஜய் சேதுபதிக்கு மச்சான்: இந்த சிறுவன் ஹிட் படங்கள் கொடுத்த நடிகர்!
காதல் ஹீரோவுக்கு மகன், விஜய் சேதுபதிக்கு மச்சான்: இந்த சிறுவன் ஹிட் படங்கள் கொடுத்த நடிகர்!
பெரிய வெற்றிப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மச்சான் கேரக்டரில் நடித்து அசத்திய இந்த சிறுவன், இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் சமீபகாலமாக நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.சினிமாவில் ஒரு நடிகர் வந்துவிட்டால் அவரை தொடர்ந்துஅவரது மகன், மகள் என பலரும் நடிக்க வந்துவிடுவார்கள். அப்படி நடிக்க வருபவர்கள் திறமை இருந்தால் வெற்றி பெறுவர்கள். இல்லை என்றால் ஓரிரு படங்களுடன் காணாமல்போய்விடுவார்கள். ஆனால் இந்த சிறுவன் ஒரு வாரிசு நடிகர் தான் என்றாலும், தனக்கென தனி பாணி வகுத்து முன்னணி இளம் நடிகராக வலம் வருகிறார். இவர் யார் தெரியுமா?தனது கல்லூரி காலத்தில் காதலை சொல்லாத ஒருவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர் நடிகர் முரளி. இதயம் படத்தில் அவர் தனது காதலை கடைசி வரை சொல்லவே மாட்டார். தனது கடைசி படத்தில் கூட அந்த படத்தின் இதயம் ராஜா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அந்த படம் பானா காத்தாடி. அந்த படத்தின் ஹீரோ முரளியின் மகள் அதர்வா முரளி. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் அதர்வா முரளி தான். 2010-ம் ஆண்டு பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான பானா காத்தாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், அடுத்து முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து தனது 3-வது படமாக பாலா இயக்கத்தில் பரதேசி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்றிருந்தது. அடுத்து சண்டி வீரன், ஈட்டி, கணிதன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். 2018-ம் ஆண்டு செம போதை ஆகாதே என்ற படத்தை தயாரித்து நடிதத்த அதர்வா அதே ஆண்டு, நயன்தாராவின் தம்பியாக விஜய் சேதபதியின் மச்சான் கேரக்டரில், இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு 100, ட்ரிக்கர், நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் நடித்திருந்த அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான டி.என்.ஏ திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்து விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்றிருந்தது.அதன்பிறகு டணல் என்ற படத்தில் நடித்திருந்த அதர்வா தற்போது இதயம் முரளி, பராசக்தி, வேலை, அட்ரஸ் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவர் தனது அப்பா முரளியுடன் இருக்கிறார்.
