Connect with us

பொழுதுபோக்கு

குட்டி குட்டியாக 5 கிளாசில் தண்ணீர் ஊற்றி… நடிகர் கார்த்திக் உடன் சுவாரசிய சந்திப்பை விவரித்த இயக்குனர்

Published

on

actor karthik

Loading

குட்டி குட்டியாக 5 கிளாசில் தண்ணீர் ஊற்றி… நடிகர் கார்த்திக் உடன் சுவாரசிய சந்திப்பை விவரித்த இயக்குனர்

சினிமா உலகில் பல சுவாரசியமான சம்பவங்களை நகைச்சுவையுடனும் ரசனையுடனும் விவரிப்பதில் தனிச் சிறப்பு கொண்டவர் இயக்குனர் பாரதி கண்ணன். சமீபத்தில் ஒரு நேர்காணலில், நடிகர் கார்த்திக் தன்னுடைய படத்திற்காக முன்பணம் வாங்கிவிட்டு, பிறகு நடந்த கூத்துக்களை நகைச்சுவை உணர்வுடன் விவரித்தது பலரையும் ரசிக்க வைத்துள்ளது. 90-களின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவராகவும் நவரச நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்தான் நடிகர் கார்த்திக். இவர் நடிகர் முத்துராமனின் மகனாவார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்திக் தனது திறமையால் ஒட்டுமொத்த திரைத்துறையையும் தன்னுடைய கால்ஷீட்டிற்கு காத்துக் கிடக்கும்படி செய்தார்.இந்நிலையில் நடிகர் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவலை இயக்குநர் பாரதி கண்ணன் டூரிங் டாக்கீஸ் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு புரோக்கர் மூலம் கார்த்திக்கை சந்தித்து கதை சொல்லச் சென்றபோது, முதல் கட்டமாக ரூ.5 லட்சம் அட்வான்ஸ் தொகையுடன் சென்றிருக்கிறார். அட்வான்ஸ் பணத்தை கார்த்திக் கையில் வாங்க மறுத்து, “நான் கையில தொடறதில்ல. நீங்க அப்பா (நடிகர் முத்துராமன்) போட்டோவுக்கு முன்னால வச்சிருங்களேன்” என்று கூறி, பணத்தை தன் தந்தையின் புகைப்படத்தின் முன் வைக்கச் சொன்னாராம். பணத்தை வைத்துவிட்டு, கதையைக் கேட்ட கார்த்திக், தன் அப்பாவின் டாலரைத் தொட்டுவிட்டு, “பாரதி, இந்தப் படம் ஏதோ ஃப்ரெஷ்ஷா வரும்னு தோணுது. அப்பாவோட வைப்ரேஷன் இருக்கு. நல்லா இருக்கு” என்று கூறிவிட்டு, “இப்ப கேக்கலாமா? நான் மண்டைக்கு மேல ஊட்டி இருக்கேன் (ஊட்டிக்கு மேட்டி இருக்கும்) அங்க வந்து கேட்டரலாம்” என்று சொல்லி கதையைத் தள்ளிப்போட்டார்.நடிகர் கார்த்திக் தன்னிடம் படத்தில் நடிக்க முன்பணம் வாங்கிவிட்டு..டேக்கா குடுத்ததை மிமிக்ரி செய்து விவரித்த இயக்குனர் பாரதி கண்ணன்.இப்போதும் பல ஹீரோக்கள் இந்த டகால்டி வேலையை செய்கிறார்கள். ஆடியோ லாஞ்ச் பேச்சுகளில் மட்டும்தான் இவர்கள் யோக்கியர்கள்.pic.twitter.com/RMbxhIQAoQஇரண்டாவது அட்வான்ஸாக மேலும் ரூ.5 லட்சம் புரொடியூசர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, இயக்குனர் பாரதி கண்ணனும் ஊட்டிக்குச் சென்று கார்த்திக்கை ரூமில் சந்திக்கிறார். அங்கேதான் தலைப்புக்கேற்ற அந்த சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியது. கதை கேட்கத் தயாரான கார்த்திக், எதிரே இருந்த மேஜையில் குட்டி குட்டியாக வைக்கப்பட்டிருந்த ஐந்து கிளாஸ்களில் தண்ணீர் ஊற்றினாராம். “ஒரு குட்டி குட்டியா ஒரு அஞ்சு கிளாஸ் வச்சாரு. அஞ்சு கிளாஸ் டொக்கு டொக்கு டக்குன்னு ஊத்துறாரு. அஞ்சையுமே எடுத்து குடிச்சுக்கிறாரு” என்று, கார்த்திக் வேகமாகத் தண்ணீர் குடித்ததை அப்படியே மிமிக்ரி செய்து இயக்குநர் விவரித்தார். சுமார் இரண்டு மணி நேரம் கதை கேட்ட பிறகு, கார்த்திக் சற்றும் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட்டை கொடுத்தார். “எனக்கு என்னமோ இந்தக் கதையில நிறைய பிளட் கொட்டற மாதிரி ஒரு ஃபீல் இருக்கு. பக்கெட் பக்கெட்டாக கொட்டற மாதிரி இருக்கு” என்று கூறிவிட்டு, “கதையை சேஞ்ச் பண்ணலாமே” என்று கேட்டு இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் கார்த்திக் அதிர்ச்சி கொடுத்தாராம்.   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன