பொழுதுபோக்கு
பிக் பாஸ் வீட்டுக்குள் இவங்கதான் முதல் தம்பதி… விஜய் சேதுபதி சொன்னது நிஜமா?
பிக் பாஸ் வீட்டுக்குள் இவங்கதான் முதல் தம்பதி… விஜய் சேதுபதி சொன்னது நிஜமா?
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 25 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை வெடித்து வருகிறது. வி.ஜே.பார்வதி, திவாகர், கம்ருதீன், அரோரா, பிரவீன் ராஜ், ரம்யா ஜோ, சபரி, சுபிக்ஷா உட்பட 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே, ஆதிரை மற்றும் கலையரசன் ஆகியோர் வரிசையாக பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு மூல காரணமாக இருப்பது வி.ஜே.பார்வதி தான் என்று கூறப்படுகிறது. அவர் இல்லாமல் இந்த 28 நாட்களில் ஒரு ப்ரொமோ கூட வந்ததில்லை. பெரும்பாலான ப்ரொமோக்கள் பார்வதியை வைத்து தான் வருகின்றன. பிக்பாஸ் ரசிகர்களே என்னடா இது சும்மா சண்டையா போட்டுக்கிட்டு இருக்காங்க என்ற லெவலில் பேச ஆரம்பித்துவிட்டார். இதையடுத்து, போட்டியை விறுவிறுப்பாகும் விதமாக பிக்பாஸ் வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கினார்.வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே சென்ற சாண்ட்ரா, பிரஜின், திவ்யா கணேஷ், அமித் ஆகியோர் ஏற்கனவே இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் வெளியில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறினார்கள். பொதுவாக அனைவருமே பார்வதியை டார்க்கெட் செய்துதான் பேசிக் கொண்டிருந்தார்கள். சரி இத்துடன் பிரச்சனை ஓய்ந்து புதிதாக எதாவது நடக்கும் என்று மக்கள் நினைத்த நிலையில் வி.ஜே.பார்வதி வைல்டு கார்டு போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கினார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நடிகர் விஜய்சேதுபதி, சாண்ட்ரா – பிரஜின் தம்பதி உள்ளே செல்லும் பொழுது முதல் முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் கப்பிள் நீங்க தான். உங்க ஆட்டம் எப்படி இருக்கப்போது என்று பார்க்க நானும் ஆர்வமாக இருக்கிறேன். இதுவரைக்கும் சொந்த பொண்டாட்டியோட எவனும் இந்த வீட்டை சுற்றி பார்த்தது இல்லை என்றார். இதற்கு வியூவர்ஸ் தாடி பாலாஜியும் அவரது மனைவியும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்தியாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். மனைவி நித்தியாவை சமாதான படுத்த வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சில் நடிகர் தாடி பாலாஜி கலந்து கொண்டார். இருந்தாலும் அவரது மனைவி சமாதானம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
