இலங்கை
முல்லைத்தீவில் சுவர் விழுந்து ராணுவம் உயிரிழப்பு
முல்லைத்தீவில் சுவர் விழுந்து ராணுவம் உயிரிழப்பு
முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள 59 ஆவது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டடத்தின் செங்கல் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்தில் 3 இராணுவச் சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (4) தெரிவித்துள்ளது.
குருநாகலைச் சேர்ந்த 24 வயதுடைய இராணுவச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்றபோது உயிரிழந்த சிப்பாயும், காயமடைந்த 3 சிப்பாய்களும் விறகு சேகரித்துக் கொண்டிருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த சிப்பாய்கள் மூவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
