உலகம்
அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த விமானம் – 11 பேர் படுகாயம்!
அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த விமானம் – 11 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது.
இந்த விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து யுனைடெட் பார்சல் சர்வீஸால் இயக்கப்படும் மெக்டோனல் டக்ளஸ் MD11F சரக்கு விமானமாகும்.
விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
விபத்து காரணமாக விமான நிலையத்தில் உள்ள அனைத்து விமானங்களையும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
