இந்தியா
இந்திய சபாநாயகருடன் சஜித் கலந்துரையாடல்!
இந்திய சபாநாயகருடன் சஜித் கலந்துரையாடல்!
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்றத்தில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர். கட்டமைப்பு சார் பரிமாற்றங்கள், கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் மூலம் இலங்கை நாடாளுமன்றத்துக்கும், இந்திய மக்களவைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இருவரும் இணக்கம் தெரிவித்தனர்.
ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் நாடாளுமன்ற ஒருமைப்பாட்டினது மதிப்புகளுக்காக இரு நாடுகளிலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புக்கள் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டன.
