Connect with us

பொழுதுபோக்கு

உன் மடியில் தான் சாவேன்னு சொன்னார், ஆனா இப்போ டி.என்.ஏ டெஸ்ட்க்கு வரல; ரங்கராஜ்க்கு செக் வைத்த ஜாய்!

Published

on

Rangaraj and Crizild

Loading

உன் மடியில் தான் சாவேன்னு சொன்னார், ஆனா இப்போ டி.என்.ஏ டெஸ்ட்க்கு வரல; ரங்கராஜ்க்கு செக் வைத்த ஜாய்!

எனது குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் டிஎன்ஏ சோதனைக்கு நான் ரெடியா இருக்கேன். அவரை வர சொல்லுங்க. மகளிர் ஆணைய விசாரணையின் போது 4 சுவற்றுக்குள்ள ஒரு மாதிரியும், வெளியே வந்து வேறு மாதிரியும் பேசுகிறார் என்று ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவர், காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாநில மகளிர் ஆணையத்தில் புகாரளித்தார். இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா பிரச்சனை தான் இணையத்தில் பேசுப்பொருளானது. இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய விசாரணையின் போது ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது குழந்தை தன்னுடையது என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டதாக ஜாய் கிரிசில்டா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் கிரிசில்டா பதிவிற்கு மறுப்பு தெரிவித்து மாதம்பட்டி ரங்கராஜ் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக  திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.நான் ஒருபோதும் டி.என்.ஏ பரிசோதனையை மறுத்ததில்லை. மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்.” என்று விளக்கம் அளித்திருந்தார்.இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜாய் கிரிசில்டா, அவரும் அவரது குடும்பமும் இணைந்த இந்த குழந்தை அவருடையது இல்லை என்ற செய்தியை பரப்புவதாக என்னிடம் நிறைபேர் சொன்னார்கள். இதில் உண்மையை நிரூபிக்க வேண்டும் என்பதால் நானே டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கலாம் என்று சொன்னேன். 4 முறை நான் வற்புறுத்தினேன். ஆனால் ரங்கராஜ் வேண்டாம், அது என் குழந்தை தான் என்று ஒப்புக்கொண்டார். 4 சுவற்றுக்குள் ஒரு மாதிரியும, வெளியில் ஒரு மாதிரியும் பேசுகிறார். என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது. அதை சொன்னால் அவருக்கு தான் பிரச்னை வரும். அந்த ரூமுக்குள் அவர் தான் டி.என்.ஏ டெஸ்ட் வேண்டாம் என்று சொன்னார். ஆனால் இப்போது மாற்றி பேசுகிறார். நான் இங்கு தான் இருக்க போகிறேன். இவரை வர சொல்லுங்க. அவரை மிரட்டி கல்யாணம் பண்ணதா சொல்கிறார். ஆனால் நான் வெளியிட்ட போட்டோவில் அவர் கோபமாகவோ, சோகமாகவோ இருக்கமாட்டார். லவ்யூ பெண்டாட்டி, உன் மடியில் தான் நான் சாவேன் என்று பல மெசேஜ்கள் அனுப்பியுள்ளார் என்று கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன