Connect with us

இலங்கை

உலகில் அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை ; நகரம் எது தெரியுமா?

Published

on

Loading

உலகில் அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை ; நகரம் எது தெரியுமா?

உலகில் ஒரே ஒரு நகரத்தில் மாத்திரம் அசைவம் சாப்பிடுவது முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரம், அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை விதித்த உலகின் முதல் நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

Advertisement

உணவு முறை என்று மட்டும் எடுத்துக் கொண்டால், சைவ உணவுகளை மட்டும் உண்ணுபவர்கள், அசைவ விரும்பிகள், வேகன் (Vegan) உணவு முறையை பின்பற்றுபவர்கள், என பல வகையில் பிரிவினர் இருக்கின்றார்கள்.

அது தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் விருப்பம்.  

அவ்வாறு இருக்கையில், அசைவ உணவை தடை செய்வது தொடர்பில் விரிவாக விளக்கம் கீழ்வருமாறு,

Advertisement

பாலிதானா நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை மூடுமாறு கோரி 200க்கும் மேற்பட்ட சமண துறவிகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்த முடிவு பெறப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில், பாலிதானா நகரம் அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை விதித்த உலகின் முதல் நகரமாக அறியப்படுகின்றது.

பாலிதானாவில் உணவு என்பது தூய்மை மற்றும் அகிம்சையை மையமாகக் கொண்ட சமண தத்துவத்தின் பிரதிபலிப்பாகும்.

Advertisement

மண்ணில் உள்ள உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க வெங்காயம், பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு போன்ற வேர் காய்கறிகளைக் கூட இவர்கள் உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்து வருகின்றார்கள்.

இங்குள்ள பல சமணர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் தவிர்ப்பதால், இப்பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வீடுகளில் சைவ அல்லது மண்ணிற்கு அடியில் விளையாத உணவுகள் மட்டுமே காணப்படும்.

அவ்வாறான முடிவு எட்டப்பட முக்கிய காரணம் இப்பகுதியில் குறிப்பிடத்தக்க கலாசார மற்றும் மத மாற்றத்தைக் குறிக்கிறது.

Advertisement

இது சமணத்தின் வலுவான செல்வாக்கையும் அதன் கொள்கைகளையும் பிரதிபலிப்பதன் காரணமாகவும், சமண துறவிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் இங்கு அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன