இலங்கை
கார் விபத்தில் உயர் மின்னழுத்த மின்தூண் அமைப்பு கடும் சேதம்!
கார் விபத்தில் உயர் மின்னழுத்த மின்தூண் அமைப்பு கடும் சேதம்!
நுவரெலியா- வட்டவளை நகர மத்திய பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில், கார் மற்றும் உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பு கடுமையாக சேதமடைந்தன.
இன்று அதிகாலை 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் அதிவேகமாக பயணித்த கார், வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பின் கான்கிரீட் கம்பத்தில் மோதியதில், வாகனம் நின்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் மற்றும் கான்கிரீட் கம்பம் இரண்டுமே கடுமையாக சேதமடைந்துள்ளன என்றும், குறித்த விபத்துக்கு வாகன சாரதியின் தூக்கமின்மையே காரணமாக இருக்கலாம் என வட்டவளை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
