Connect with us

வணிகம்

வெறும் ₹3,900 எஸ்.ஐ.பி. முதலீட்டில் ₹66 லட்சம் வீட்டுக் கடன் வட்டியைத் திரும்பப் பெறுவது எப்படி? கடனும் கஷ்டமும் இனி இல்லை!

Published

on

Home loan interest calculation SIP for home loan interest Rs 3900 monthly SIP

Loading

வெறும் ₹3,900 எஸ்.ஐ.பி. முதலீட்டில் ₹66 லட்சம் வீட்டுக் கடன் வட்டியைத் திரும்பப் பெறுவது எப்படி? கடனும் கஷ்டமும் இனி இல்லை!

பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி: வீட்டுக்கடனை மொத்தமாக அடைப்பதா அல்லது உபரி பணத்தை முதலீடு செய்வதா?இந்தக் கேள்விக்குப் பலரும் திகைத்து நிற்கும் நிலையில், உங்கள் வீட்டுக்கடன் இ.எம்.ஐ-யில் (EMI) வெறும் 10% தொகையை மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி–யில்   (SIP) முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் 25 ஆண்டுகளில் செலுத்தும் முழு வட்டித் தொகையையும் திரும்பப் பெற முடியும் என்று நிதிக் கணக்கீடுகள் காட்டுகின்றன!₹50 லட்சம் வீட்டுக் கடனுக்கான வட்டியாக நீங்கள் செலுத்தும் கிட்டத்தட்ட ₹66 லட்சம் தொகையை, வெறும் ₹3,900 மாத எஸ்.ஐ.பி (SIP) மூலம் எப்படி ஈடுசெய்யலாம் என்று விரிவாகப் பார்ப்போம்.₹50 லட்சத்திற்கான வீட்டுக் கடன் கணக்கீடுமுதலில், 8% வட்டி விகிதத்தில் 25 ஆண்டுகளுக்கு நீங்கள் வாங்கும் ₹50 லட்சம் கடனுக்கான விவரங்களைப் பார்ப்போம்:கிட்டத்தட்ட ₹50 லட்சம் கடனுக்கு, நீங்கள் ₹66 லட்சம் வட்டியைச் செலுத்துகிறீர்கள்.இ.எம்.ஐ-யில் 10% முதலீடு: எஸ்.ஐ.பி-யின் மாயம்!உங்கள் இ.எம்.ஐ தொகையான ₹38,591-ல் இருந்து 10% தொகையான ₹3,900-ஐ (சற்றே அதிகம்) எடுத்து, அதை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி. ஆக முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். அந்த முதலீடு ஆண்டுக்குச் சராசரியாக 12% வருடாந்திர வருமானம் (Annualised Return) ஈட்டினால் என்ன நடக்கும்?ஆம்! வெறும் ₹11.70 லட்சம் மட்டுமே முதலீடு செய்து, 25 ஆண்டுகளில் ₹66.40 லட்சம் கார்பஸை உருவாக்க முடியும்.இதன் மூலம், நீங்கள் வீட்டுக்கடனுக்குச் செலுத்தும் ஒட்டுமொத்த வட்டித் தொகையான ₹65.78 லட்சம் முழுவதையும், இந்த எஸ்.ஐ.பி. கார்பஸ் (₹66.40 லட்சம்) மூலம் ஈடுகட்ட முடியும்!இந்தக் கார்பஸை எப்படிப் பயன்படுத்துவது? (3 முக்கியச் சூழ்நிலைகள்)சூழ்நிலை 1: கடனும் எஸ்.ஐ.பி-யும் 25 ஆண்டுகள் தொடர்ந்தால்8% வட்டி விகிதத்தில் 25 ஆண்டுகளுக்கு ₹50 லட்சம் கடனுக்கான உங்கள் வட்டி = ₹65.78 லட்சம்25 வருட முதலீட்டுக்குப் பிறகு உங்கள் SIP கார்பஸ் (12% வருமானத்தில்) = ₹66.40 லட்சம்உருவாக்கப்பட்ட கார்பஸ் வீட்டுக் கடன் வட்டியை விட அதிகமாக இருப்பதைக் காணலாம். எனவே, கடனை முன்கூட்டியே செலுத்த வழிகளைத் தீவிரமாகத் தேடுவதற்குப் பதிலாக, கடன் திருப்பிச் செலுத்தும் காலத்திற்குள் முழு வட்டித் தொகையையும் மீட்பதற்கு நீங்கள் SIP-யைக் கருத்தில் கொள்ளலாம்.சூழ்நிலை 2: எஸ்.ஐ.பி. கார்பஸ் மூலம் கடனை மூடுதல் (Foreclose)எஸ்.ஐ.பி. முதலீட்டுக் கார்பஸ் மூலம் நீங்கள் கடனை எப்போது முழுமையாக முடிக்க முடியும் என்று இப்போது பார்ப்போம்.19-வது ஆண்டின் தொடக்கத்தில் கடனை முழுமையாக முடித்துக் கொள்ளலாம். ஏனெனில், அந்த நேரத்தில் எஸ்.ஐ.பி. முதலீட்டின் மூலம் உருவாக்கப்பட்ட கார்பஸ் கடன் இருப்புக்குச் சமமாக இருக்கும்.நவம்பர் 2025-இல் எடுத்த ₹50 லட்சம், 25 வருட கடனுக்கு, ஜனவரி 2044-இல் உள்ள கடன் இருப்பு ₹24.32 லட்சம் ஆக இருக்கும்.ஜனவரி 2044-இல் ₹3,900 SIP முதலீட்டிலிருந்து கார்பஸ் (12% வளர்ச்சியில்) ₹24.34 லட்சம் ஆக இருக்கும். இதன் மூலம் நீங்கள் கடனை முன்கூட்டியே முடிக்க முடியும், மேலும் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளையும் சேமிக்க முடியும்.சூழ்நிலை 3: எஸ்.ஐ.பி-க்கு பதிலாக இ.எம்.ஐ அதிகரித்தால் (Prepayment)நீங்கள் எஸ்.ஐ.பி (SIP) முதலீட்டையே தொடங்காமல், கடனின் இரண்டாவது ஆண்டிலிருந்து மாதா மாதம் ₹3,900 ஐ கடனின் அசல் தொகைக்கு முன்கூட்டியே செலுத்த முடிவு செய்தால் என்ன நடக்கும்?உங்கள் 25 வருடக் கடன் 19 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களாகக் குறையும்.நீங்கள் சேமிக்கும் வட்டித் தொகை: ₹17.63 லட்சம்இந்த வழியில், உங்கள் வீட்டுக் கடன் இ.எம்.யி-யில் வெறும் 10% முதலீடு செய்வதன் மூலம், நீண்ட காலத்திற்கு லட்சக்கணக்கில் வட்டியையும், கடன் காலத்தையும் சேமிக்க முடியும் என்பதை நீங்கள் காணலாம்.(நீங்கள் முன்கூட்டியே பணம் செலுத்துவதன் மூலம் ₹17.63 லட்சம் வட்டியை மட்டுமே சேமிக்க முடியும். ஆனால், எஸ்.ஐ.பி. முதலீட்டின் மூலம் ₹66.40 லட்சம் கார்பஸை உருவாக்க முடியும்.)முடிவு என்ன?பேஸிக் ஹோம் லோன் (BASIC Home Loan) சி.இ.ஓ. அதுல் மோங்கா தி எகானாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “எஸ்.ஐ.பி-க்கள் ஒழுக்கமான முதலீட்டை ஊக்குவிக்கின்றன. மேலும், கடனுக்கான வரிச் சலுகைக்குப் பிறகு செலுத்தப்படும் வட்டி விகிதத்தை விட, முதலீட்டின் வரிக்குப் பிந்தைய வருமானம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.”எனவே, கடனை முன்கூட்டியே அடைப்பது (இது ஆபத்து இல்லாத வருமானத்தைக் கொடுக்கும்) அல்லது முதலீடு செய்வது (இது நீண்ட காலத்தில் அதிக வருமானம் ஈட்டும்) என்பதில், உங்கள் எஸ்.ஐ.பி. வருமானம் கடனுக்கான வட்டி விகிதத்தை விட அதிகமாக இருக்கும் என்று நம்பினால், சிறு தொகையை எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்வது, பல லட்சம் வட்டிச் சுமையை ஈடுசெய்யும் ஒரு புத்திசாலித்தனமான நீண்ட கால உத்தி ஆகும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன