Connect with us

தொழில்நுட்பம்

120 அடி நீளம், 1 டன் எடை… உலகின் மிகப்பெரிய ஜெல்லிமீனின் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!

Published

on

largest jellyfish

Loading

120 அடி நீளம், 1 டன் எடை… உலகின் மிகப்பெரிய ஜெல்லிமீனின் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!

கற்பனை செய்து பாருங்க.. சூரியன் மறைந்த நேரம், வட அமெரிக்காவின் சாலிஷ் கடலின் (Salish Sea) குளிர்ந்த, அமைதியான நீருக்கு அடியில் நீங்க தனியாக நீந்துகிறீர்கள். உங்க நோக்கம், சில ஸ்க்விட் (squid) அல்லது சாதாரண ஜெல்லிமீன்களைப் படம்பிடிப்பது மட்டுமே. நீருக்கடியில் வீடியோ எடுக்கும் ஜான் ரோனி (John Roney) அப்படித்தான் கடலுக்குள் சென்றார்.நீந்தத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே… ஏதோ ஒன்று அவரது தலைக்கு மேலே மிதந்து சென்றது. அது ஒரு நீண்ட, மெல்லிய கரம் (tentacle). அவர் நிமிர்ந்து பார்த்தார்… அதன் முடிவே கண்ணுக்குத் தெரியவில்லை. ஆர்வத்தில், அந்த மர்மமான கரத்தைப் பின்தொடர ஆரம்பித்தார் ரோனி. ஒரு நிமிடத்திற்கும் மேலாக அவர் அதைத் தொடர்ந்தார்… இறுதியாக, அவர் கண்ட காட்சி அவரை மெய்சிலிர்க்க வைத்தது. அது… ஒரு பிரம்மாண்டமான, ராட்சத ‘லயன்ஸ் மேன்’ ஜெல்லிமீன்’ (Lion’s Mane Jellyfish)!இது சாதாரண ஜெல்லிமீன் அல்ல. இதுதான் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய, மிக நீளமான, மற்றும் அதிக எடை கொண்ட ஜெல்லிமீன் இனம். ரோனி படம்பிடித்த வீடியோவில், அந்த ஜெல்லிமீனின் பிரம்மாண்டம் அப்பட்டமாகத் தெரிகிறது. அதன் ‘மணி’ (Bell) போன்ற தலைப்பகுதி, வெளிறிய, ஒளியூடுருவும் தன்மையுடன் (translucent) தண்ணீரில் மிதக்கிறது. அதற்குள், ஆழமான ஆரஞ்சு, ஊதா, மற்றும் கருஞ்சிவப்பு (crimson) நிறங்கள் ஒன்றோடொன்று கலந்து, ஒரு அமானுஷ்ய அழகைக் காட்டுகின்றன. அதன் எண்ணற்ற கரங்கள், தண்ணீரின் அசைவுக்கு ஏற்ப நடனமாடுகின்றன.இந்த ஜெல்லிமீன்கள் எந்த அளவுக்குப் பெரியதாக வளரும் தெரியுமா? இன்றுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகப்பெரிய ‘லயன்ஸ் மேன்’ ஜெல்லிமீனின் கரங்கள் 120 அடி நீளம் கொண்டவை! (இது ஒரு நீலத் திமிங்கலத்தை விட நீளமானது!) அதன் ‘மணி’ போன்ற தலை மட்டும் 7 அடி விட்டம் கொண்டது. கின்னஸ் உலக சாதனை அறிக்கையின்படி, இதன் எடை சுமார் 1 டன் (1,000 கிலோ) வரை இருக்கும்!இந்த ஜெல்லிமீன் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இது மிகவும் ஆபத்தான வேட்டையாடும் விலங்கு. “இந்தக் கரங்களில் கொட்டும் (stinging) செல்கள் உள்ளன,” என்று விளக்குகிறார் ரோனி. “இவற்றைப் பயன்படுத்திதான், தனக்கு அருகில் வரும் மீன்கள், விலங்கு மிதவைகள் (zooplankton), ஏன்… மற்ற ஜெல்லிமீன்களைக் கூட இது பிடித்து, உள்ளே இழுத்துச் சாப்பிடும்.” ரோனி தனது பதிவில் இறுதியாகக் குறிப்பிடுவது இதுதான்: “நான் படம்பிடிக்க விரும்பும் அத்தனை துடிப்பான, அழகிய நிறங்களும் இதில் உள்ளன. ஆனால் ஒரு எச்சரிக்கை. இது நீங்க நிச்சயமாகத் தொட விரும்பாத ஒரு ஜெல்லிமீன்!.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன