Connect with us

பொழுதுபோக்கு

OTT: பரபர திரில்லர் டூ ஆக்ஷன் ஃபேண்டஸி வரை… வியூஸ்களை அள்ளித் தட்டிய டாப் வெப் சீரிஸ்கள்!

Published

on

p[olice

Loading

OTT: பரபர திரில்லர் டூ ஆக்ஷன் ஃபேண்டஸி வரை… வியூஸ்களை அள்ளித் தட்டிய டாப் வெப் சீரிஸ்கள்!

ஒவ்வொரு வாரமும் ஓ.டி.டி தளங்களில் படங்கள், வெப் தொடர்கள் என வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி, ஓ.டி.டி-யில் ஸ்ட்ரீமாகி வரும் திரில்லர், ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டஸி ஜானரில் அதிக வீயூஸ்களை குவிக்கும் டாப் வெப்தொடர்களின் பட்டியல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.போலீஸ் போலீஸ்’சரவணன் மீனாட்சி’ சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது ‘போலீஸ் போலீஸ்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் ஷபானா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி-யில் ரிலீஸாகி கடந்த வாரம் 10 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.ஐ.டி வெல்கம் டூ டேரிசைக்கலாஜிக்கல் ஹாரர் கதைக்களத்தி வெளிவந்த வெப்தொடர் ’ஐ.டி வெல்கம் டூ டேரி’ (IT welcome to derry)  இந்த வெப்தொடர் ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது. கடந்த வாரம் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்களின் பட்டியலில் இந்த வெப் தொடர் 5-ஆம் இடத்தில் உள்ளது. அதன்படி இத்தொடர் கடந்த வாரம் 8 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.தி விட்சர்கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் ஆக்ஷன், அட்வென்ச்சர், ஃபேண்டஸி வெப் தொடர் ’தி விட்சர்’ (The Witcher). இத்தொடரின் நான்காவது சீசன் நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி-யில் ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இத்தொடர் கடந்த வாரம் 11 லட்சம் வியூஸ் பெற்று பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.குருக்ஷேத்திராகுருக்ஷேத்திர போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஹிந்தி வெப் தொடர் ’குருக்ஷேத்திரா’ (Kurukshetra). நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி-யில் ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் இத்தொடர், கடந்த வாரம் 13 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.மகாபாரத் ஏக் தர்மயுத்ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் ரிலீசான வெப் தொடர் ’மகாபாரத் ஏக் தர்மயுத்’ (Mahabharat – Ek Dharmayudh). மகாபாரதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்தொடர், ஓ.டி.டி பிரியர்களின் நல்ல வரவேற்பு பெற்று கடந்த வாரம் 16 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன