இலங்கை
டுபாயில் தலைமறைவாகியிருந்து போதைப்பொருள் கடத்தும் பெண்ணின் உதவியாளர் கைது
டுபாயில் தலைமறைவாகியிருந்து போதைப்பொருள் கடத்தும் பெண்ணின் உதவியாளர் கைது
டுபாயில் தலைமறைவாகியிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பெண்ணின் உதவியாளர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முழு நாடும் ஓரணியில் – தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சோதனைகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி 22 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே, டுபாயில் தலைமறைவாகியுள்ள குறித்த பெண் ஊடாக போதைப் பொருள் கடத்தப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை நீர்கொழும்பு நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
