இலங்கை
தமிழர் பகுதியொன்றில் பெருந்தொகை கேரள கஞ்சா மீட்பு
தமிழர் பகுதியொன்றில் பெருந்தொகை கேரள கஞ்சா மீட்பு
கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டி உச்சமுனை களப்பு மற்றும் கற்பிட்டி கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் படகுகளால் நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, கடலோரப் பகுதியில் இரண்டு சந்தேகத்திற்கிடமான டிங்கிகள் கண்காணிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, குறித்த டிங்கி இயந்திர படகுகளில் பதினெட்டு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 38 கிலோகிராம் கஞ்சா தொகையுடன் இரண்டு டிங்கி இயந்திர படகுகளும் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவின் மதிப்பு எட்டு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா மற்றும் டிங்கி படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
