Connect with us

சினிமா

பணம் பறிக்கும் முயற்சி.. என் கணவரை காப்பாற்றுவேன்.! மாதம்பட்டி முதல் மனைவி அதிரடி கருத்து

Published

on

Loading

பணம் பறிக்கும் முயற்சி.. என் கணவரை காப்பாற்றுவேன்.! மாதம்பட்டி முதல் மனைவி அதிரடி கருத்து

சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா திருமண விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி பிரியா தற்பொழுது வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளதால், நிலைமை மேலும் தீவிரமாகியுள்ளது.மாதம்பட்டி ரங்கராஜ், சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்ற நபராகவும், சமையல் துறையில் பெயர் பெற்றவராகவும் அறியப்பட்டவர். சமீபத்தில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா உடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் திருமண பந்தம் ஏற்பட்டதாகவும் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.அத்துடன் கிரிஸில்டாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி பிரியா ஆரம்பத்தில் மௌனமாக இருந்த அவர், தற்போது தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறியுள்ளார்.தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ருதி பிரியா, “என் கணவருடன் உறுதியாக நின்று இறுதிவரை மாதம்பட்டி ரங்கராஜை காப்பாற்றுவேன்… ஜாய் கிரிஸில்டாவின் உண்மையான நோக்கம் பணம் பறிப்பது தான்… எங்கள் குடும்ப அமைதியைக் குலைத்து எனது வாழ்க்கையை நாசம் செய்ய ஜாய் கிரிஸில்டா முயற்சி செய்கிறார். எனக்கு பணம், வீடு எதுவும் வேணாம். நான் யாரையும் பிரிக்க விரும்பவில்லை என்று கூறிக்கொண்டு கிரிஸில்டா பணம் பறிக்க முயற்சி செய்கின்றார்.” எனத் தெரிவித்துள்ளார். இவ்வறிக்கை வெளியானதிலிருந்து ரசிகர்கள் சிலர் ஸ்ருதி பிரியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க, மற்றொரு தரப்பு கிரிஸில்டாவின் நிலைப்பாட்டையும் கேட்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்படுகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன