Connect with us

பொழுதுபோக்கு

பதவி மோகம், மனைவி உதவியுடன் பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் எம்.எல்.எ; கனியை காப்பாற்றுவது யார்?

Published

on

Anna Serial

Loading

பதவி மோகம், மனைவி உதவியுடன் பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் எம்.எல்.எ; கனியை காப்பாற்றுவது யார்?

கனியை காப்பாற்றிய சண்முகம்.. மீண்டும் மீண்டும் கனவில் வந்த சம்பவம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் குடும்பத்தினர் எம்.எல்.ஏ வீட்டிற்கு சென்று ஏமாற்றம் அடைந்த நிலையில் இன்று, கிடைத்த கார் நம்பரை வைத்து கனியை தேடும் வேட்டை தொடர மறுபக்கம் கல்யாண கோலத்தில் கனியை உட்கார வைத்து பூஜை நடக்கிறது. அடுத்ததாக எம்.எல்.ஏ-ன் ஆள் ஒருவன் சண்முகத்திடம் சிக்க அவனை வைத்து எம்.எல்.ஏ இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கிறான். எம்.எல்.ஏ கனி கழுத்தில் தாலி கட்ட போகும் சமயத்தில் அங்கு வந்த சண்முகம் அவர்களை அடித்து துவைத்து கனியை காப்பாற்றுகிறான். வீரா போலீசுடன் வந்து அனைவரையும் கைது செய்கிறாள். அடுத்து கனியை வீட்டுக்கு அழைத்து வந்து ஏன் டி இப்படி பண்ண என்று திட்ட நடந்ததை சொல்கிறாள். பிறகு கனிக்கு சமாதானம் செய்து தூங்க வைக்கின்றனர். ஆனாலும் தூங்கி கொண்டிருந்த கனிக்கு அந்த கல்யாண நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து அலண்டு எழுகிறாள். இதனால் கனியை குணப்படுத்துவதற்காக வெளியே சுற்றுலா செல்லலாம் என முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த குடும்பத்துக்கே வாரிசு வர கூடாது.. மீனாட்சி செய்யும் சூழ்ச்சி – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட் கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசி தீபாவிடம் ஹாஸ்பிடலுக்கு போய் செக்கப் செய்து விடலாம் என்று பேசிய நிலையில் இன்று, இவர்கள் பேசுவதை பார்த்த மீனாட்சி நான் குடும்பத்துக்கு வாரிசே வர கூடாதுனு நினைக்கிறன், ஆனால் நீங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறீங்களா? என்று மனதுக்குள் பேசி கொள்கிறாள். இதையடுத்து அடுத்த நாள் தீபாவுடன் ஹாஸ்பிடல் கிளம்ப என் பொண்ணை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க நீங்க யாரு? நானே எனக்கு தெரிந்த டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறேன் என்று சொல்கிறாள். மீனாட்சி தனக்கு தெரிந்த டாக்டர் இல்லாமல் வேறொரு டாக்டரிடம் அழைத்து செல்வதால் அதிர்ச்சி அடைகிறாள். ஹாஸ்பிடலில் யாருக்கும் தெரியாமல் அண்ணனுக்கு போன் செய்து ஹாஸ்பிடல் அட்ரஸை கொடுத்து டாக்டரை சந்தித்து பேச சொல்கிறாள். பிறகு மீனாட்சியின் அண்ணா டாக்டரை சந்தித்து பேச அவர் நேர்மையானவர் என்பதால் தவறான மாத்திரை கொடுக்க முடியாது, பொய் சொல்ல முடியாது என்று பதிலடி கொடுக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் மீனாட்சியின் அண்ணன் டாக்டரை மிரட்டுகிறான். வெற்றியும் துளசியும் இதே ஹாஸ்பிடலுக்கு வர மீனாட்சியின் அண்ணன் வெளியே வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கொடுத்த வில்லன் டீம்.. சிலையை மீட்க போராடும் கார்த்திக், நடந்தது என்ன? – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சிலையை கண்டுபிடிக்கும் முயற்சியில் கார்த்தி இறங்கிய நிலையில் இன்று, கார்த்திக்கு கருப்பு கலர் கார் ஒன்று நின்று கொண்டிருந்த விஷயம் நினைவுக்கு வந்து அந்த காரில்  தான் சிலையை கடத்த வேண்டும் என சந்தேப்படுகிறான். உடனே போலீஸ் உதவியுடன் செக் போஸ்ட்டில் சோதனையிட சொல்கிறான். இந்த விஷயம் சிவனாண்டிக்கு தெரிய வர அவன் முத்துவேலுக்கு தகவல் கொடுத்து காருக்கு பதிலாக ஆட்டோவில் மாறி போக சொல்கிறான், இதனால் செக்போஸ்டில் ஆட்டோவில் சோதனையிடாமல் அனுப்பி விடுகின்றனர். பிறகு கார்த்திக் கார் எதுவும் வரவில்லை என தெரிந்து அந்த வழியாக நோட்டமிட ரோட்டின் ஓரத்தில் ஒரு கார் நிற்பது தெரிய வருகிறது. இதையடுத்து வேறொரு வாகனத்தில் ஏறி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் கார்த்திக்கு உருவாகிறது. மறுபக்கம் ரேவதி மயில்வாகனம் ஆகியோர் பரமேஸ்வரியை சந்திக்க வருகின்றனர், பாட்டி வயசான காலத்தில் எதுக்கு விரதம் இருக்கனும் சாப்பிடுங்க என்று சொல்ல இந்த கும்பாபிஷேகம் நல்லபடியா நடக்கும் வரை சாப்பிட மாட்டேன் என்று சொல்லி விடுகிறார். இன்னொரு பக்கம் சாமுண்டீஸ்வரி சந்திரகலாவிடம் என்னை சுத்தி எல்லாமே தப்பா நடக்குது என்று சிலை காணாமல் போன விஷயம் குறித்து சொல்லி வருத்தப்பட, கார்த்திக் தனது போலீஸ் நண்பன் சரவணனை சந்தித்து பேச சிலை கட்டத்தில் கை தேர்ந்த ஒருவனை சந்திக்க முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன