இலங்கை
பத்மேவுடன் புகைப்படம் எடுத்தேன்; ஆனால் அவரை தெரியாது; நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
பத்மேவுடன் புகைப்படம் எடுத்தேன்; ஆனால் அவரை தெரியாது; நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
போதை பொருள் குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவுடன் புகைப்படம் எடுத்தேன் என்றும், எனினும், பத்மேவை தனக்குத் தெரியாது என்றும் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா, கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கபடாத பொதிலும் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா தானாக முன்வந்து சி.ஐ.டி.க்குச் சென்று இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
2022 துபாய் புத்தாண்டு விழாவிற்கு என் சொந்த செலவில் என் குடும்பத்துடன் நான் சென்றேன். அன்று லட்சக்கணக்கான மக்கள் இருந்தனர். அந்த பெயர் கொண்ட நடிகைகளும் இருந்தனர்.
நான் பத்மேவுடன் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பத்மே என்று எனக்குத் தெரியவில்லை என்றும் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா கூறியதாக தெரிவிகப்பட்டுள்ளது.
துபாய் எனக்கு இரண்டாவது வீடு போன்றது. எனக்கு அங்கு ஒரு தொழில் உள்ளது.
பத்மேவைச் சந்திக்க நான் துபாய் செல்லவில்லை. எனக்கு நிறைய பணம் இருக்கிறது. எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
நான் கஷ்டப்பட்டு என் பெயரை உருவாக்கினேன். பலர் அந்தப் பெயரைக் கெடுக்க முயற்சிக்கிறார்கள்.
நீங்கள் புத்தாண்டு விழாக்களுக்குச் சென்றால், கவனமாக இருங்கள், கவனமாக புகைப்படங்களை எடுங்கள் என்றும் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதை பொருள் குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நளிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
