இலங்கை
950கிலோ போதைப்பொருள் கோம்பயன் மணல் மயானத்தில் எரித்து அழிப்பு!
950கிலோ போதைப்பொருள் கோம்பயன் மணல் மயானத்தில் எரித்து அழிப்பு!
யாழ்ப்பாணத்தில் கடந்த சில காலங்களாக கைப்பற்றப்பட்ட 950கிலோ போதைப்பொருள்கள் நேற்று எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் மற்றும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்ற நீதிவான் உசைன் ஆகியோரின் முன்னிலையில் கோம்பயன் மணல் இந்து மாயானத்தின் மின்தகன மேடையில் போடப்பட்டு குறித்த போதைப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன .
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் எடுத்துவரப்பட்ட குறித்த போதைப்பொருள்கள், நீதிவான், நீதிமன்ற பதிவாளர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.
