Connect with us

பொழுதுபோக்கு

வருவாராம், குழந்தை கொடுப்பாராம்; ஓடிப்போவாராம் – ஜாய் கிரிசில்டா வெளியிட்ட முக்கிய ஆதாரம்

Published

on

joy 2

Loading

வருவாராம், குழந்தை கொடுப்பாராம்; ஓடிப்போவாராம் – ஜாய் கிரிசில்டா வெளியிட்ட முக்கிய ஆதாரம்

தமிழ் சினிமா வட்டாராத்தில் பிரபலமாக அறியப்படுபவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவை மாவட்டம் மாதம்பட்டியில் பிறந்ததன் மூலம் மாதம்பட்டி ரங்கராஜ் என அழைக்கப்படுகிறார். இவரது தந்தை சினிமா வட்டாராத்தில் மிகப் பிரபலமான சமையல் வல்லுனராக அறியப்பட்ட நிலையில், சமையல் துறையில் படிப்பை மேற்கொண்டு தானும் சிறந்த சமையல் வல்லுனர் என்பதை நிரூபித்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். அவரது பாரம்பரிய ரெசிபிக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமையலைத் தொடர்ந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் காலாடி எடுத்து வைத்தார் மாதம்பட்டி ரங்கராஜ். தொடர்ந்து ‘பென்குயின்’ படத்திலும் நடித்தார். சினிமாவில் நடித்திருந்தாலும், அவரைப் பிரபலமாக்கியது அவரது சமையல்தான். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் சமையல் செய்து அசத்தி பெரும் பிரபலமடைந்தார். தொடர்ந்து, விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி  வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி மேலும் புகழ் பெற்றுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்ருதி என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் தான், கடந்த ஆகஸ்ட் மாதம், மாதம்பட்டி ரங்கராஜ் காஸ்டியூம் டிசனைரான ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மாலைகள் அணிந்திருக்கும் புகைப்படத்தை ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட, அது காட்டுத் தீ போல் பரவியது. இந்த அலை ஓய்வதற்குள் ஜாய் கிரிசில்டா தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அடுத்த புகைப்படத்தை இறக்கினார். இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இத்தகைய சூழலில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இதேபோல், மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். இதையடுத்து மகளிர் ஆணையம் விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்துத் திருமணம் செய்ததாகவும், தன்னுடைய குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டதாகவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜாய் கிரிசில்டா பதிவிட்டிருந்தார். இவரு வருவாராம் கல்யாணம் பண்ணுவாராம் குழந்தை குடுப்பாராம் அப்புறம் ஓடி போவாராம் பெண்கள் வாழ்க்கையை அழிப்பாராம் இதுல இவங்க protect பண்ணுவாகலாம் என்ன கருமம் டா இது 😂உருகி உருகி லவ் பண்ணிட்டு blackmail னு சொன்னா எப்புடி so called husband 🙈🙈 @MadhampattyRR#madhampattyrangaraj… pic.twitter.com/rd6FWRDEFGஇதற்கு மறுப்பு தெரிவித்த மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டி திருமணம் செய்ததாகவும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்று தெரிவித்ததாக கூறினார். மேலும், மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை என்றும் கூறினார். இந்நிலையில், ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இவரு வருவாராம் கல்யாணம் பண்ணுவாராம் குழந்தை குடுப்பாராம் அப்புறம் ஓடி போவாராம். பெண்கள் வாழ்க்கையை அழிப்பாராம். இதுல இவங்க ப்ரொட்டக்ட் பண்ணுவாகலாம் என்ன கருமம் டா இது. உருகி உருகி லவ் பண்ணிட்டு பிளாக் மேயில்னு சொன்னா எப்புடி சோ கால்டு ஹஸ்பண்ட் (So called husband)” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன