Connect with us

இந்தியா

வாக்காளர் பட்டியலில் 200 புகைப்படங்கள்: எத்தனை முறை வாக்களித்தார் ராகுல் கேள்வி; ‘ஒருமுறைதான்’ வாக்காளர் பதில்

Published

on

Charanjit Kaur vote chori 2

Loading

வாக்காளர் பட்டியலில் 200 புகைப்படங்கள்: எத்தனை முறை வாக்களித்தார் ராகுல் கேள்வி; ‘ஒருமுறைதான்’ வாக்காளர் பதில்

ஹரியானாவில் நடந்த 2024 சட்டமன்றத் தேர்தல்கள் “திருடப்பட்டுவிட்டதாக” எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை குற்றம் சாட்டினார். மேலும், தேர்தலில் இரண்டு வாக்குச்சாவடிகளில் 223 முறை இடம்பெற்ற ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினார். “அவர் எத்தனை முறை வாக்களித்தார் என்பதைத் தேர்தல் ஆணையம் எங்களிடம் சொல்ல வேண்டும்” என்று அவர் கூறினார்.ஆங்கிலத்தில் படிக்க:தேர்தல் ஆணையம் காந்திக்கு பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால், அம்பாலா மாவட்டத்தின் தகோலா கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் அமர்ந்திருக்கும் 75 வயதான சரண்ஜீத் கவுர் அதற்கு ஒரு பதிலைக் கொண்டுள்ளார்: ஒரு முறைதான் வாக்களித்தேன்.ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு திடீரென வெளிச்சத்துக்கு வந்த அந்த கிராமத்திற்குத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்றது. தகோலா கிராமத்தில் மொத்தம் 2,117 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள வாக்குச்சாவடி எண்கள் 63 மற்றும் 65-ல் குறைந்தது 255 வாக்காளர்களின் பெயர்களுக்கு அருகில் சரண்ஜீத் கவுரின் புகைப்படம் தோன்றுகிறது என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்தது. ஆனால், இந்த 255 பேரில் பலருக்கு, இது புதிய செய்தி அல்ல.தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அத்தகைய 17 நபர்களை விசாரித்தது. இந்தச் சிக்கல் குறைந்தது பத்தாண்டு காலமாக இருந்து வருகிறது, இது அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்பதையும் கண்டறிந்தது.தகோலாவைச் சேர்ந்த விவசாயியான லக்மிர சிங் (71) கூறுகையில், அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வைத்திருக்கும் வாக்காளர் அடையாள அட்டைகளில் சரியான புகைப்படங்கள் உள்ளன. ஆனால், வாக்காளர் பட்டியலில், அவரது புகைப்படம் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற 10 பேரின் புகைப்படங்களுக்குப் பதிலாக சரண்ஜீத் கவுரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.“நான் வாக்களிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் – அது எம்.எல்.ஏ, எம்.பி அல்லது கிராம சர்பஞ்ச் தேர்தலாக இருந்தாலும் – என் புகைப்படம் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தேர்தல் ஊழியர்கள் கூறுகின்றனர்” என்று லக்மிர கூறினார்.  “அப்போது நான் எனது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டுகிறேன். நான் ஒரு உண்மையான வாக்காளர் என்பதை நிரூபிக்க எனது ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத்தையும் காட்டுகிறேன்.”லக்மிரின் சகோதரர்களான லக்மிந்தர் சிங் மற்றும் சுக்விந்தர் சிங் மற்றும் ரஞ்சித் சிங், கரம்ஜீத் கவுர், ஸ்வரன் கவுர், குர்விந்தர் கவுர், சுர்ஜீத் கவுர், கமல்ஜீத் சிங், பரம்ஜீத், மற்றும் ஜஸ்ஜீத் சிங் ஆகிய மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்கு அருகிலும் சரண்ஜீத் கவுரின் புகைப்படம் உள்ளது. இந்த 11 குடும்ப உறுப்பினர்களில் 7 பேர் 2024 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்ததாக லக்மிர கூறினார்.கிராமத்தில் வசிக்கும் மற்றொரு நபர் தேஜிந்தர் சிங், அவரும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவரும் இதே பிரச்னையை எதிர்கொண்டதாகக் கூறினார். “2022-ல், நாங்கள் கிராம சர்பஞ்ச் தேர்தலில் வாக்களிக்கச் சென்றபோது, ​​வாக்குப் பதிவு முகவர்கள் மற்றும் தேர்தல் ஊழியர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். எங்கள் புகைப்படங்கள் வாக்காளர் பட்டியலுடன் பொருந்தவில்லை என்று கூறினர். வாக்களிக்க நாங்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டியிருந்தது” என்று அவர் கூறினார். இந்த நான்கு குடும்ப உறுப்பினர்களில் மூன்று பேர் 2024 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்ததாகவும் அவர் கூறினார்.பழ வண்டி நடத்தும் ஜோதி ராம் (74) மற்றும் அவரது மருமகள் ரோமா தேவி ஆகியோரும் தங்கள் பெயர்களுக்குப் பதிலாக வாக்காளர் பட்டியலில் சரண்ஜீத் கவுரின் புகைப்படத்தைக் காண்கின்றனர். “தேர்தல் முகவர்களுக்கு எங்களைத் தெரியும், எனவே எங்கள் பெயர்களுக்கு அருகில் சரண்ஜீத் கவுரின் புகைப்படம் தோன்றினாலும், வாக்களிப்பதில் நாங்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்வதில்லை. கிட்டத்தட்ட 250 வாக்காளர்கள் ஒரே மாதிரியான பிரச்னையைப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​தேர்தல் ஊழியர்களுக்கும் ஆட்சேபனை எழுப்புவது சவாலானது” என்று ஜோதி கூறினார். இருவரும் 2024 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தனர்.தனது வீட்டில் இருக்கும் சரண்ஜீத் கவுர் நிலைமையை அறிந்திருக்கிறார். “நான் வாக்களிக்கச் செல்லும்போதெல்லாம், தேர்தல் ஊழியர்கள், பணியில் உள்ள போலீசார் மற்றும் வாக்குப் பதிவு முகவர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள்.”5-ஆம் வகுப்பு வரை படித்த சரண்ஜீத், “பல வாக்காளர்களுக்கு எனது புகைப்படம் இருப்பது என் தவறு அல்ல என்று நான் எல்லோரிடமும் சொல்கிறேன். அதைச் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர்களிடம் சொல்கிறேன். ஆனால், அது இன்னும் சரி செய்யப்படவில்லை” என்று கூறினார்.அவரது மருமகள் குர்மீத் கவுர் 2022 கிராம சர்பஞ்ச் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.கிராம சர்பஞ்ச் சோனியா தேவியின் கணவர் தேவிந்தர் சிங், இந்தச் சிக்கல் “அச்சுப் பிழை, வேறொன்றுமில்லை” என்று கூறினார்.“இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தும் சரி செய்யப்படவில்லை” என்று அவர் கூறினார். “போலியான வாக்களிப்பு நடந்திருந்தால், முல்லானா தொகுதிக்கு அக்டோபர் 2024 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கிராமத்திலிருந்து காங்கிரஸ் கிட்டத்தட்ட 150 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸின் வருண் சௌத்ரி வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவரது மனைவி பூஜா சௌத்ரி வெற்றி பெற்றார். பல வாக்காளர்களின் முன் சரண்ஜீத் கவுரின் புகைப்படம் தோன்றுவது குறித்து வருண், “இத்தகைய வாக்காளர் பட்டியல் இருப்பது தவறு. இது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டைப் பற்றி என்ன சொல்கிறது? ஹரியானா வாக்காளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கத் தேர்தல் ஆணையம் இப்போது பணியாற்ற வேண்டும்” என்றார்.லக்மிர சிங்கின் மகனான ரஞ்சித் சிங், அவரது குடும்பத்தில் 11 உறுப்பினர்கள் புகைப்படப் பொருந்தாதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2022 பஞ்சாயத்துத் தேர்தலுக்கு முன்பு, இந்தச் சிக்கலைச் சரிசெய்யக் கோரி, வட்டார வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அலுவலர் (BDPO) முன்பு அவர்கள் தர்ணா நடத்தியதாகக் கூறினார். “ஆனால் எதுவும் நடக்கவில்லை,” என்று அவர் கூறினார்.வாக்குச்சாவடி நிலை அலுவலர் (பி.எல்.ஓ) அரவிந்த் அகர்வால், தான் ஒரு மாதத்திற்கு முன்புதான் பொறுப்பேற்றதாகக் கூறினார்: “இந்தத் தவறு எப்படி நடந்தது என்பதை முந்தைய அதிகாரிகள் மட்டுமே விளக்க முடியும். ஆனால் இப்போது நான் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து, புகைப்படச் சிக்கலை விரைவில் தீர்க்கத் தேர்தல் துறைக்கு அவர்களின் வழக்குகளைச் சமர்ப்பிப்பேன்.” என்றார்.அந்த கிராமத்தில் வசிக்கும் குர்தீப் சிங், அவரது தாயார் கரம்ஜீத் கவுர் 2005 முதல் 2009 வரை கிராம சர்பஞ்சாகப் பணியாற்றினார் என்றும், அந்தக் காலத்தில் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் சரியான புகைப்படங்கள் இருந்தன என்றும் கூறினார். தகோலா கிராமத்தில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகள் உட்பட 7 தேர்தல் வாக்குச்சாவடிகளைக் கவனிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியரான ராஜீவ் கர்பந்தா, தனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பொறுப்பு வழங்கப்பட்டது என்றும், முந்தைய பதிவுகளைப் பற்றித் தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.தேர்தல் துறையின் அதிகாரப்பூர்வ ஆதாரம், 2022 பஞ்சாயத்துத் தேர்தலுக்கு முன்பு ஒரு புகார் பெறப்பட்டதாகவும், சில வாக்காளர்களின் புகைப்படங்கள் சரி செய்யப்பட்டதாகவும் கூறியது. “வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு ஒரு பி.டி.எஃப் கோப்பு அனுப்பப்படும்போது, ​​அந்தக் கோப்புச் சிதைந்து போகும்போது இத்தகைய தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுகின்றன,” என்று அவர் கூறினார்.பராரா (அம்பாலா) துணைப் பிரிவுக் குற்றவியல் நடுவர்-மற்றும் தேர்தல் பதிவு அதிகாரி சதிந்தர் சிவாச் கூறுகையில், “நாங்கள் முழு விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். புகைப்படத்தைப் புதுப்பிப்பதற்காக படிவம் 8-ஐ நிரப்பும் அனைத்துத் தகுதியான வாக்காளர்களின் புகைப்படங்களையும் நாங்கள் புதுப்பிப்போம்” தேசிய வாக்காளர் சேவை இணையதளம் (என்.வி.எஸ்.பி) மூலமாகவும் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.ஹரியானா தலைமைத் தேர்தல் அதிகாரி ஏ. ஸ்ரீனிவாஸ், இந்த விவகாரம் குறித்துத் தீவிரமாக ஆராயப்படும் என்று கூறினார்.பிரேசில் பெண்ணின் புகைப்படத்துடன் மேலும் சில பெண்கள்புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில், சோனிபட் மாவட்டத்தின் ராய் பகுதியில், ஒரு பிரேசில் நாட்டுப் பெண்ணின் ஸ்டாக் புகைப்படம் 10 வாக்குச்சாவடிகளில் 22 முறை வாக்களிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் காந்தி கூறினார். “அவருக்கு சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, ரேஷ்மி, விமலா எனப் பல பெயர்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை அந்தப் பெண்களில் நான்கு பேரை சந்தித்தது. அவர்கள் அனைவரும் இந்த பிரச்னை குறித்துத் தங்களுக்குத் தெரியாது என்றும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாக்களித்ததாகவும் கூறினர். வியாழக்கிழமை, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மேலும் 5 பெண்களிடம் பேசியது, அவர்களில் குறைந்தது 3 பேர் வாக்களித்திருந்தனர்.அக்பர்பூர் பரோட்டா கிராமத்தில், 57 வயதான பிம்லா தேவியின் மகன் சுனில், அவரது தாயார் 2017-ம் ஆண்டு முதல் தனது படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அட்டையைக் கொண்டுள்ளார் என்றும், அதைப் பயன்படுத்தியே அவர் வாக்களித்தார் என்றும் கூறினார்.பரோட்டாவைச் சேர்ந்த பூனம் (29), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் சோனுவுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு கிராமத்தை விட்டு வெளியேறினார். “ஆனால் அவள் ஒரு போலி வாக்காளர் அல்ல. அவள் இங்கிருந்து வாக்களித்தார்” என்று சோனு கூறினார். அவரது தொலைபேசியில் அவரது வாக்காளர் அடையாள அட்டையின் மென்நகலைக் காட்டினார்.பரோட்டாவின் மற்றொரு குடியிருப்பாளர் அஞ்சு (54), 2024 தேர்தலில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாக்களித்ததாகக் கூறினார். அவர் 2012-ம் ஆண்டு முதல் தனது சொந்தப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டுள்ளார்.சரோஜ் (37), 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்திற்குப் பிறகு ராயில் இருந்து பிவானிக்குக் குடிபெயர்ந்ததாகவும், கடந்த ஆண்டுத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றும் கூறினார். இருப்பினும், தான் ஒரு “உண்மையான வாக்காளர்” என்று அவர் கூறினார்.குண்ட்லி கிராமத்தில் வசிக்கும் சுனிதா (32), 2024-ல் வாக்களித்ததாகவும், வாக்காளர் பட்டியலில் புகைப்படம் பொருந்தாது குறித்துத் தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன