இலங்கை
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இலங்கையின் நிலை என்ன?
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இலங்கையின் நிலை என்ன?
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட முதல் 30 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலை உலக புள்ளி விபர நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எனினும் குறித்த பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
குறித்த பட்டியலில் தென் சூடான் முன்னிலையில் உள்ளது.
24.3 சதவீதம் அதிகரித்த வளர்ச்சி வீதத்தை அந்த நாடு கொண்டுள்ளது.
தென் சூடானை அடுத்து லிபியா(15.6%), கயானா(10.3%), அயர்லாந்து (9.1%) ஆகிய நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன.
