Connect with us

தொழில்நுட்பம்

-80°C குளிரில் உறையும் மனித மலம்… எதிர்கால பேரழிவுகளைத் தடுக்க விஞ்ஞானிகள் புதிய முயற்சி!

Published

on

Scientists are freezing human poop

Loading

-80°C குளிரில் உறையும் மனித மலம்… எதிர்கால பேரழிவுகளைத் தடுக்க விஞ்ஞானிகள் புதிய முயற்சி!

விஞ்ஞானிகள் மனித மலத்தை உறைய வைத்துச் சேமிக்கிறார்கள். இதைக் கேட்டதும் உங்களுக்குச் சிரிப்பு வரலாம். ஆனால், மனிதகுலத்தின் எதிர்காலத்தையே காப்பாற்றக்கூடிய ஒரு மாபெரும் திட்டத்தின் முதல் படி இதுதான். ஆம், எதிர்காலப் பேரழிவிலிருந்து நம்மைக் காப்பதற்காக, உலகெங்கிலும் உள்ள மனித மல மாதிரிகளை விஞ்ஞானிகள் தீவிரமாகச் சேகரித்து, உறைய வைத்து வருகின்றனர். இந்தத் திட்டத்தின் பெயர் “மைக்ரோபயோட்டா வால்ட்” (Microbiota Vault).காரணம், ஒரு அமைதியான படுகொலை. நமது உடலிலும், நாம் வாழும் சுற்றுச்சூழலிலும் வாழும் கோடிக்கணக்கான “நல்ல” நுண்ணுயிர்களை (Microbes) நாம் வேகமாக இழந்து வருகிறோம். நமது நவீன வாழ்க்கை முறைதான். தேவையில்லாமல் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics), நவீன விவசாய முறைகள், மற்றும் காலநிலை மாற்றத்தால் உருகும் உறைபனிகள்… இவை அனைத்தும் சேர்ந்து, நமது குடல் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள இன்றியமையாத மைக்ரோபயோம்களை ஒட்டுமொத்தமாக அழித்து வருகின்றன. இதன் விளைவு? இன்று நாம் காணும் கணக்கற்ற ஒவ்வாமைகள் (Allergies), மற்றும் நம்மையே தாக்கும் ஆட்டோ இம்யூன் நோய்கள் (Autoimmune disorders).இந்த அழிவிலிருந்து நல்ல நுண்ணுயிரிகளைக் காப்பாற்ற உருவாக்கப்பட்ட ஒரு நவீன “நோவாவின் பேழை” தான் இந்த ‘மைக்ரோபயோட்டா வால்ட்’. 2029-க்குள், உலகம் முழுவதிலுமிருந்து 10,000 மல மாதிரிகளைச் சேகரிப்பது. ஒரு மனிதனின் மலத்தில், அவனது குடல் ஆரோக்கியத்தின் அஸ்திவாரமாக இருக்கும் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளன. இவற்றைச் சேமிப்பதே நோக்கம். மல மாதிரிகளுடன், “குடலுக்கு உகந்த” பாக்டீரியாக்கள் நிறைந்த 200 வகையான புளித்த உணவுகளும் ( தயிர், ஊறுகாய்) சேமிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சுவிட்சர்லாந்தில் உள்ள பாதுகாப்பான கிடங்கில் மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் (-80°C) குளிரில் பத்திரமாக உறைய வைக்கப்பட்டுள்ளன.எதிர்காலத்தில் இந்த நுண்ணுயிரிகளை மீண்டும் மனித குடலுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ செலுத்தினால், அவை பழையபடி வேலை செய்யுமா என்று எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை” என விஞ்ஞானிகளே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், இது எதிர்கால சந்ததியினருக்கான நமது கடமை என்று அவர்கள் கூறுகிறார்கள்.எதிர்காலத்தில் புதிய நோய்கள் உருவாகும்போது, அதற்குத் தீர்வு இந்த நுண்ணுயிரிகளிடம் இருக்கலாம். மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு இவை பயன்படலாம். சிதைந்துபோன சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க இவை உதவலாம். இந்தத் திட்டத்தின் உத்வேகம், நார்வேயில் உள்ள ‘ஸ்வால்பார்ட் உலகளாவிய விதை பெட்டகம்’ (Svalbard Seed Vault) ஆகும். அங்கே எப்படி உலக அழிவிலிருந்து விதைகளை காப்பாற்றுகிறார்களோ, அதேபோல் இங்கே நுண்ணுயிரிகளைக் காப்பாற்றுகிறார்கள்.தற்போது இந்த மல வங்கியில் பெனின், பிரேசில், எத்தியோப்பியா, கானா, லாவோஸ், தாய்லாந்து போன்ற பல நாட்டு மக்களின் 1,204 மல மாதிரிகள் பாதுகாப்பாக உள்ளன. இன்று நாம் சேமிக்கும் இந்த நுண்ணுயிரிகள், ஒருவேளை 100 ஆண்டுகளுக்குப் பிறகு வரவிருக்கும் ஒரு மாபெரும் பேரழிவை தடுத்து நிறுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன